முகப்பு /செய்தி /தமிழ்நாடு / "வேளாண் பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றியுள்ளது" - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

"வேளாண் பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றியுள்ளது" - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

TN Agriculture Budget 2023 : வேளாண் மானிய கோரிக்கையில் இடம் பெற்றவை தான், பட்ஜெட் என்ற தலைப்பில் தமிழக அரசு தாக்கல் செய்திருப்பதாகவும் தமிழக விவசாயிகளை ஏமாற்றும் வேலையாக பட்ஜெட் இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கான பெரிய திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இதையடுத்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட்டாக வேளாண் பட்ஜெட் உள்ளது. வேளாண் மானிய கோரிக்கையில் இடம் பெற்றவைதான், பட்ஜெட் என்ற தலைப்பில் தமிழக அரசு தாக்கல் செய்திருப்பதாகக் கூறினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “வேளாண் மானிய கோரிக்கையில் இடம் பெற்ற அம்சங்கள் மட்டுமே பட்ஜெட்டில் உள்ளது. வேளாண் பெருமக்களுக்கு முக்கியமாக கிடைக்க கூடிய பலன்கள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை. கரும்புக்கு ஆதார விலை 4000 வழங்கப்படும் என அறிவித்துவிட்டு ஆட்சிக்கு வந்தவுடன் 190 ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார். நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு 2,500 ரூபாயும் கரும்புக்கு 4,000 வழங்கப்படும் என தெரிவித்த நிலையில் அது தொடர்பான அறிவிப்புகள் எதுவும் இல்லாதது விவசாயிகளை ஏமாற்றும் செயல்" என்று அவர் குற்றம்சாட்டினார்.

“கன மழையால் அறுவடைக்கு தயாரான நெல் மணிகளுக்கு 13,500 ரூபாய் தான் கொடுத்து உள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் 20,000 ரூபாய் கொடுக்கப்பட்டது” என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், “விவசாயிகளின் காப்பீட்டு ப்ரீமியம் கூட யாருக்கும் கிடைக்கவில்லை. பல லட்சம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி வருகிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்த வெளியில் வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு பெரு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நெல் மூட்டைகளை பாதுகாக்க தார்ப்பாய் ஏற்பாடுக்கள் கூட செய்யவில்லை.” என குற்றம்சாட்டினார்.

top videos
    First published:

    Tags: TN Budget 2023