முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பிபிஜி சங்கர் கொலை விவகாரம்: கொலையாளிகளுக்கு வீடியோ மூலம் பதிலளித்த சகோதரர் மனைவி

பிபிஜி சங்கர் கொலை விவகாரம்: கொலையாளிகளுக்கு வீடியோ மூலம் பதிலளித்த சகோதரர் மனைவி

கோப்புப் படம்

கோப்புப் படம்

கொலையாளிகள் தங்களை மண்ணோடு மண்ணாக புதைக்க முயன்றாலும், மரமாக எழுந்து நிழல் தருவோம். தொடர்ந்து அடிப்பதால் நாங்கள் தாழ்ந்துபோக மாட்டோம் என்று மறைந்த பிபிஜி சங்கரின் அண்ணன் மனைவி தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிபிஜிடி சங்கர் பாஜக பட்டியலினப் பிரிவு மாநிலப் பொருளாளராக இருந்து வந்தார். இவர்  இரும்பாலை கழிவுப் பொருட்களை வாங்கி, விற்பனை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 27ம் தேதி இரவு சென்னை கொளத்தூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு காரில் வீடு திரும்பும் போது, நசரத்பேட்டை சிக்னல் அருகே கார்களில் மர்ம கும்பல் சங்கரின் காரை வழிமறித்து, 3 நாட்டு வெடிகுண்டுகளை வீசியது.

அதிர்ச்சியடைந்த சங்கர், காரிலிருந்து இறங்கி, ஓடிய நிலையில், துரத்திச் சென்ற கும்பல் சுற்றிவளைத்து வெட்டி படுகொலை செய்தது. இந்த படுகொலை தொடர்பாக நசரத்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் சினிமா பாணியில் நடைபெற்ற இந்த கொலையால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி கவுன்சிலர் சாந்தகுமார் உள்ளிட்ட ஒன்பது பேர் இந்த கொலை வழக்கு சம்பந்தமாக எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பாஜக பிரமுகரான பிபிஜிடி சங்கர் பிரபல ரவுடியான பிபிஜி குமரனின் அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் முன்விரோதம் காரணமாக கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் நாட்டு வெடிகுண்டுகளை வீசி குமரனை கொலை செய்தனர்.

இந்த சூழலில் அவரது அண்ணன் பிபிஜிடி சங்கர் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கொலையாளிகளுக்கு பதிலளிக்கும் விதமாக பிபிஜி குமரனின் மனைவி பிரசித்தா யூடியூப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தங்கள் குடும்பம் ரவுடி குடும்பம் இல்லை என்றும், நாங்கள் ரவுடி குடும்பமாக இருந்தால், எங்களை வெட்ட வந்தவர்களை நாங்களே செய்து முடித்திருப்போம் என்றும் குறிப்பிட்டார்.

இதையும் வாசிக்கஅமித்ஷா, இபிஎஸ் சந்திப்பை வைத்து கூட்டணியை யூகிக்கலாம்... அண்ணாமலை சூசகம்

top videos

    கொலையாளிகளுக்கு குறுங்கதை ஒன்றைக் கூறிய பிரசித்தா, ’என்னதான் கொலை செய்து தங்கள் குடும்பத்தை மிரட்டினாலும், தங்கள் மனஉறுதி என்றும் குலையாது என்றும், தங்களை எத்தனை முறை அழிக்க முயற்சித்தாலும் பயந்து பின்வாங்க மாட்டோம் என்றும் கூறினார். கொலையாளிகள் தங்களை மண்ணோடு மண்ணாக புதைக்க முயன்றாலும், மரமாக எழுந்து நிழல் தருவோம் என்றும், தொடர்ந்து அடிப்பதால் நாங்கள் தாழ்ந்துபோக மாட்டோம் என்றும் கூறியுள்ளார். பிபிஜிடி சங்கர் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது சகோதரர் மனைவி வெளியிட்டுள்ள இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    First published:

    Tags: BJP, Crime News