முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 12 மணி நேர வேலை... அமைச்சர்களுடன் தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை- திமுக சங்கமும் எதிர்ப்பு

12 மணி நேர வேலை... அமைச்சர்களுடன் தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை- திமுக சங்கமும் எதிர்ப்பு

12 மணி நேர வேலை... அமைச்சர்களுடன் தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை- திமுக சங்கமும் எதிர்ப்பு

12 மணி நேர வேலை மசோதாவுக்கு தி.மு.கவின் தொழிற்சங்கமான தொ.மு.சவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தனியார் நிறுவனங்களில் வேலைநேரத்தை 12 மணிநேரமாக உயர்த்தி, தொழிலாளர் சட்ட விதிகளில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்தது. அதன்படி, தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் ஒரு நாளில் 12 மணி நேரம் வேலை செய்யலாம். வாரத்திற்கு 3 நாட்கள் விடுமுறை என்ற மசோதா கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் கணேசன் தாக்கல் செய்தார். காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தி.மு.க கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருப்பினும், அந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. தி.மு.க அரசின் முடிவுகளுக்கு கூட்டணி கட்சிகள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்துவந்த நிலையில், இந்த விவகாரத்துக்கு முதன்முறையாக கூட்டணி கட்சிகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். நாம் தமிழர் கட்சியும் 12 மணி நேர வேலைச் சட்டத்துக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெறும் என்று சீமான் அறிவித்துள்ளார்.

இந்த மசோதாவுக்கு தமிழகம் முழுவதும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்யுள்ளன. பல்வேறு இடங்களில் தொழிற்சங்க ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடும் எதிர்ப்பு தெரிவித்த தொழிற்சங்கங்கள் வரும் 12-ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தன. இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில், தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, சி.வி.கணேசன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆலோசனையில், சிஐடியு, ஏ.ஐ.டி.யூ.சி, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளன. அந்த பேச்சுவார்த்தையின்போது, மசோதாவில் இடம்பெற்றுள்ள சில அம்சங்களுக்கு திமுகவின் தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டம் குறித்து பேசிய சி.ஐ.டி.யு மாநிலச் செயலாளர் சௌந்தர்ராஜன், ‘இந்த சட்டம் எந்த பாதுகாப்பும் இல்லாத சட்டம். இது ஒரு அபாயகரமான சட்டம். இந்த சட்டத்தை ரத்து செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளோம், இதை முதல்வரிடம் இன்றே எடுத்து சொல்ல உள்ளனர் அமைச்சர்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

12 மணி நேர வேலை மசோதா- இன்று முதல்வரைச் சந்திக்கும் கூட்டணி கட்சித் தலைவர்கள்

top videos

    அண்ணா தொழில் சங்கத் தலைவர் கமலகண்ணன், ‘அதிமுக சார்பில் எதிர்ப்பு தெரிவித்தோம். 12 மணி நேரம் வேலை மசோதா திரும்ப பெற வேண்டும். இல்லை என்றால் போராட்டம் நடத்த உள்ளோம். வேலை நேரம், பயணம் நேரம் 17 மணி நேரமாக இருக்கும். இதை திரும்பி பெற வேண்டும். இல்லை என்றால் இந்த மே தினம் கருப்பு தினமாக இருக்கும்’ என்று தெரிவித்தார்.

    First published:

    Tags: Tamil Nadu