முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆண்மையற்ற செயல்; அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் - பிடிஆர் ஆடியோ விவகாரத்தில் கே.எஸ்.அழகிரி காட்டம்

ஆண்மையற்ற செயல்; அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் - பிடிஆர் ஆடியோ விவகாரத்தில் கே.எஸ்.அழகிரி காட்டம்

அண்ணாமலை கே.எஸ்.அழகிரி

அண்ணாமலை கே.எஸ்.அழகிரி

பழனிவேல் தியாகராஜன் ஆடியோ வெளியிட்டது குறித்து அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி விமர்சனம் செய்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழக நிதியமைச்சர் குறித்த சர்ச்சைக்குரிய ஆடியோவை அண்ணாமலை வெளியிட்டிருப்பது ஆண்மையற்ற செயல் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சனம் செய்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலாளராக வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன் என்பவர் உள்ளார். பெரம்பலூரைச் சேர்ந்த இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு விபத்து ஒன்றில் சிக்கி சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். அவரை பார்த்து நலம் விசாரிப்பதற்காக தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று மாலை பெரம்பலூருக்கு வந்திருந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, ‘ஒரு கட்சியை மிரட்டுவது போல செயல்களைச் செய்வது தவறானதாகும். இந்த ஆடியோ நிதி அமைச்சருடையது அல்ல என்று அவரே விளக்கம் அளித்து விட்டார். எனவே அண்ணாமலை இது போன்ற பொய்யான தகவல்களை பரப்புவது ஆண்மையற்ற செயல். இது அண்ணாமலைக்கு உகந்தது அல்ல. இதற்கு அவர் மன்னிப்பு கேட்டு இருந்தால் மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும். நிதியமைச்சர்  ஒரு பாரம்பரியமான குடும்பத்திலிருந்து வந்தவர். மிகச் சிறந்த கல்விமான்.

அவரைப் பற்றி இது போன்ற கற்பனையான தகவல்களை வெளியிடுவது தவறு. அண்ணாமலை பாஜக முக்கிய நிர்வாகிகளை பற்றி அவதூறாக கூறினார் என்று கூட இது போன்ற ஆடியோக்களை வெளியிட முடியும். திராவிட முன்னேற்றக் கழகத்தை கொள்கை ரீதியாகவும், ஆட்சியை பற்றியும் விமர்சிக்கலாம் என்றார்.

அதனைத்தொடர்ந்து கர்நாடகாத் தேர்தல் அரசியல் களம் குறித்து கேட்ட போது, ‘வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருப்பதாகவும், ராகுல் காந்தியின் நடைப்பயணத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு என்று தெரிவித்தார்.

மெட்ரோ ஒப்பந்தம் தொடர்பாக முதலமைச்சர் மீது சி.பி.ஐயில் புகார்- அண்ணாமலை

இதனைத் தொடர்ந்து பேசிய அழகிரி, ‘அண்ணாமலை மிகவும் கோழைத்தனமான ஒரு செயலில் ஈடுபட்டு இருக்கிறார். கர்நாடகாவில் நடைபெற்ற ரேவண்ணா கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமானப்படுத்தும் வகையில் பாதியிலேயே நிறுத்தப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து ஏதேதோ காரணமும் கூறி வருகிறார் அண்ணாமலை.

top videos

    அதனை மீண்டும் ஒலிக்க வைத்திருக்க வேண்டும். அதனை செய்யாமல் கோழைத்தனமான செயலில் ஈடுபட்டிருப்பது ஏற்புடையதல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

    First published:

    Tags: Annamalai, KS Alagiri