முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கிருஷ்ணகிரி ஆணவப் படுகொலை: நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்தார் வெட்டுப்பட்ட அனுசுயா

கிருஷ்ணகிரி ஆணவப் படுகொலை: நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்தார் வெட்டுப்பட்ட அனுசுயா

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

படுகாயமடைந்த அனுசுயாவிற்கு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனை, தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது

  • Last Updated :
  • Kalladaikurichi, India

கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்ததால் மாமனாரால் சரமாரியாக வெட்டப்பட்ட பெண்ணிடம், நீதிபதி வாக்குமூலம் பெற்றார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள அருணபதி கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ், அரியலூர் மாவட்டம் துடியலூரைச் சேர்ந்த வேறொரு சமூகத்தைச் சேர்ந்த அனுசுயாவை காதலித்து திருமணம் செய்தார். சுபாஷின் தந்தை தண்டபாணி, இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், சித்திரை திருநாளுக்கு மகனையும், மருமகளையும் வரவழைத்த தண்டபாணி இரவு தூங்கிக்கொண்டிருந்தபோது மருமகளை வெட்டினார். அதனை தடுக்க முயன்ற சுபாஷையும், தடுக்க வந்த தனது தாயான கண்ணம்மாவையும் தண்டபாணி கொடூரமாக வெட்டினார். இதில் சுபாஷும், கண்ணம்மாவும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

கட்டாயம் வாசிக்க:  ஆணவக் கொலைகளை தடுக்க கடுமையான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்’ – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

படுகாயமடைந்த அனுசுயாவிற்கு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனை, தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுசுயா அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி, அனுசுயாவிடம் இரண்டு மணி நேரம் வாக்குமூலம் பெற்றார்.

top videos
    First published:

    Tags: Caste, Honour killing