முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பழங்குடியினர் அவமதிக்கப்பட்ட விவகாரம் : ரோகிணி தியேட்டர் பணியாளர் மீது பாய்ந்தது வன்கொடுமை சட்டம்!

பழங்குடியினர் அவமதிக்கப்பட்ட விவகாரம் : ரோகிணி தியேட்டர் பணியாளர் மீது பாய்ந்தது வன்கொடுமை சட்டம்!

ரோகிணி திரை அரங்கம் விவகாரம்

ரோகிணி திரை அரங்கம் விவகாரம்

பொதுமக்கள் கூடும் திரை அரங்கில் இந்த மக்கள் வேண்டுமென்றே அவமானப்படுத்தப் பட்டுளளதாகவும், திரை அரங்கு நிர்வாகம் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் பொது மக்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

Rohini theatre issue:  சென்னை கோயம்பேடு ரோகிணி திரை அரங்கில் நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுத்து விவகாரத்தில் டிக்கெட் பரிசோதகர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் காவிரி அளித்த புகாரின் அடிப்படையில் கோயம்பேடு போலீசார் இந்த வழக்குப்பதிவை செய்தனர்.

முன்னதாக, நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகியுள்ள பத்து தல படத்தை காண ரோகிணி திரையரங்கில் டிக்கெட் எடுத்த நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த 10 பேரை, திரையரங்கிற்குள் நுழைய அனுமதி மறுத்து ஓரமாக நிற்க வைக்கப்பட்ட காட்சிகள் வெளியாகின. பொதுமக்கள் கூடும் திரை அரங்கில் இந்த மக்கள் வேண்டுமென்றே அவமானப்படுத்தப் பட்டுளளதாகவும், திரை அரங்கு நிர்வாகம் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் பொது மக்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், U/A சான்றளிக்கப்பட்ட திரைப்படம் என்பதால் சிறுவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், அதனாலேயே அவர்களுடன் வந்த நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த சிலரை அனுமதிக்கவில்லை என திரையரங்கு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. சர்ச்சையை தவிர்ப்பதற்காக நரிக்குறவர்கள் சிறப்பு அனுமதி வழங்கி அவர்கள் படத்தை கண்டுகளித்த வீடியோவையும் திரையரங்க நிர்வாகம் வெளியிட்டது.

இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக, கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் கண்ணன், ரோகிணி திரையரங்கிற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

இதையும் வாசிக்க: கலைகள் அனைவருக்கும் சொந்தமானது... நரிக்குறவர்களை திரையரங்கில் அனுமதிக்காதது குறித்து ஜிவி பிரகாஷ் ட்வீட்!

top videos

    இதையடுத்து இந்த விவகாரத்தில் டிக்கெட் பரிசோதகர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் காவிரி அளித்த புகாரின் அடிப்படையில் கோயம்பேடு போலீசார் இந்த வழக்குப்பதிவு  செய்யப்பட்டுள்ளது.

    First published:

    Tags: SC / ST Act, Tamil Nadu