முகப்பு /செய்தி /தமிழ்நாடு / Exclusive | மாணவிகள் பயமில்லாமல் விளக்கம் அளிக்கும் சூழலை உருவாக்க வேண்டும்- கலாஷேத்ரா விவகாரம் குறித்து டி.எம்.கிருஷ்ணா

Exclusive | மாணவிகள் பயமில்லாமல் விளக்கம் அளிக்கும் சூழலை உருவாக்க வேண்டும்- கலாஷேத்ரா விவகாரம் குறித்து டி.எம்.கிருஷ்ணா

Exclusive | மாணவிகள் பயமில்லாமல் விளக்கம் அளிக்கும் சூழலை உருவாக்க வேண்டும்- கலாஷேத்ரா விவகாரம் குறித்து டி.எம்.கிருஷ்ணா

கலாக்ஷேத்ரா விவகாரத்தில் மாணவிகள் பயமில்லாமல் புகார் அளிக்கும் சூழலை உருவாக்க வேண்டும் என்று டி.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Chennai, India

சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் ருக்மணிதேவி நுண்கலைக் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகள் பலருக்கும் அங்குப் பணியாற்றும் நான்கு ஆசிரியர்கள் கடந்த 10 ஆண்டுகளாகப் பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பிரச்னைக்கு எதிராக மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரம் தமிழ்நாடு அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், ’கலாஷேத்ராவில் நடைபெறும் மாணவிகள் போராட்டம் குறித்து பேசிய கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, ‘இந்த விவகாரம் குறித்து யார் விசாரித்தாலும் மாணவிகளுக்கு பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியம். பல ஆண்டுகள் காலஷேதிராவில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று உள்ளேன். அங்கு இது போன்ற நிகழ்வு நடப்பது வருத்தம் அளிக்கிறது.

இது இன்றோ நேற்றோ நடக்கக்கூடிய பிரச்சினையாக இல்லை. திடீரென்று வரும் பிரச்சனையும் இல்லை. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும். ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையேயான பிரச்சனையை கேள்வி கேட்க வேண்டும். அவர்களுக்குள் இருக்கும் குரு சிஷ்யன் உறவு கேள்வி கேட்கக்கூடிய ஒன்றாக அமைய வேண்டும்.

இதுபோன்ற பிரச்சனைகளை மத்திய அரசு விசாரித்தாலும் மாநில அரசு விசாரித்தாலும் அல்லது எந்த ஒரு அரசு சார்ந்த விசாரணை அமைப்புகள் விசாரித்தாலும் அங்குள்ள மாணவிகள் பயமில்லாமல் தைரியத்துடன் பாதுகாப்புடன் நல்ல சூழ்நிலையில் கேள்வி கேட்கும் அதிகாரிகள் அதில் நியமிக்கப்பட வேண்டும்.

அங்கு பாலியல் ரீதியான குற்றச்சாட்டுக்கள் வருகிறது என்றால் அது மட்டும் அங்கு நடக்கவில்லை. வேறு சில குற்ற நிகழ்வுகளும் நடக்க வாய்ப்பு இருக்கிறது. தற்போது சில சமூக வலைதளங்களில் ஆண் மாணவர்களுக்கும் இதுபோல பிரச்சனை இருப்பதாக சிலர் எழுதி இருக்கிறார்கள். இது இன்றோ நேற்று நடந்த நடக்கும் பிரச்சனை அல்ல நீண்ட நாட்களாக நடக்கும் பிரச்சினை’ என்று தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Tm krishna