கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை ஈஸ்வரப்பபா நிறுத்த கூறியதில் எந்த தவறும் இல்லை என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கர்நாடகத்தில் உள்ள சிவமோகா நகரில் பா.ஜ.க. சார்பில் வியாழக்கிழமை தமிழ் வாக்காளர்கள் மாநாடு நடைபெற்றது. தமிழ் வாக்காளர்களின் ஆதரவைத் திரட்டும் நோக்குடன் மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது மேடையில் இருந்த முன்னாள் துணை முதலமைச்சர் ஈஸ்வரப்பா, தமிழ்த்தாய் வாழ்த்தை நிறுத்த உத்தரவிட்டார்
மேலும், அவரின் வற்புறுத்தலின் பேரில் கன்னடதாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு தமிழ் ஆர்வலர்கள் வருத்தத்தையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, “தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இழிவுபடுத்தும் வகையில் செயல்படும் பாஜக கட்சியினரை தடுக்க முடியாத அண்ணாமலை, தமிழ் மக்களைப் பற்றி எப்படி கவலைப்படுவார்” என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதையும் படிங்க: நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியா? கோவையில் நிர்வாகிகள் முன்னிலையில் கமல் சூசகம்
மேடை நாகரிகம் கூட இல்லாமல் தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்தியதன் மூலம் தமிழ்த்தாயை இழிவுபடுத்தியுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், கன்னடமொழிக்கும் தாய் தமிழ்மொழி தான். கன்னடத்திற்காக தமிழை இழிவுபடுத்துவது தாய்க்கும் தாயை இழிவுபடுத்துவதற்கு சமமானது என குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடகா மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டது கண்டு இடிவிழுந்த மண்குடமாய் இதயம் நொறுங்கியது என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். தமிழ்த்தாய் வாழ்த்தை ஒலிபரப்பாமல் இருந்திருக்கலாம்; என கூறியுள்ள வைரமுத்து, பாதியில் நிறுத்தியது ஆதிமொழிக்கு அவமானம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சர்ச்சைக் குறித்து நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ஈஸ்வரப்பா எந்த தவறும் செய்யவில்லை என கூறினார்.
தமிழ்த்தாய் வாழ்த்து மீண்டும் முழுமையாக இசைக்கப்பட்டதாக அண்ணாமலை கூறியிருந்த நிலையில், பாதியில் நிறுத்தப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மீண்டும் பாடப்படவில்லை என்று ஷிவமோகா தமிழ்த் தாய் சங்கத்தின் செயலாளர் தண்டபாணி கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Annamalai, BJP, Karnataka Election 2023