முகப்பு /செய்தி /தமிழ்நாடு / காங்கிரஸ், பாஜக யார் வென்றாலும் ஒன்றுதான்... - சீமான்

காங்கிரஸ், பாஜக யார் வென்றாலும் ஒன்றுதான்... - சீமான்

சீமான்

சீமான்

கர்நாடகாவில் அம்மாநில மக்கள் மாற்றத்தைக் கொடுத்துள்ளனர் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Sivaganga, India

மேகதாதுவில் அணை கட்டுவதாக காங்கிரஸ், பாஜக இரு தேசிய கட்சிகளும் கூறியுள்ளதால், கர்நாடகத் தேர்தலில்  யார் வெற்றி பெற்றாலும் ஒன்றுதான் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே அரணையூரில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது தந்தையின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘மேகதாதுவில் அணை கட்டுவதாக காங்கிரஸ், பாஜக இரு தேசிய கட்சிகளும் கூறியுள்ளதால், கர்நாடகாத் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் ஒன்றுதான் என்றார்.

கர்நாடகா தேர்தல் முடிவுகள் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்குமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அதனை  பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் என்றும், கர்நாடகாவில் இரண்டு கட்சிகள் மாறி மாறி ஆட்சி புரிவதால், கர்நாடக மக்கள் மாற்றத்தை கொடுத்துள்ளனர் என்றார். அண்ணாமலை ஆடியோ விவகாரம் குறித்த கேள்விக்கு, அண்ணாமலையை நல்ல ஆடியோ, வீடியோ வெளியீட்டாளராக பார்க்கின்றேன் என சீமான் தெரிவித்தார்.

First published:

Tags: Karnataka Election 2023, Seeman