கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 224 இடங்களில் ஆட்சியமைக்க 113 தொகுதிகள் தேவை. காங்கிரஸ் 136 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. ஆளுங்கட்சியான பாஜக 63 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் இருந்துவருகிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 21 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்துவருகிறது.
பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையில் காங்கிரஸ் முன்னிலையில் இருப்பதால் அக்கட்சித் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். காங்கிரஸ் கட்சி ஆட்சியமைப்பது உறுதியான நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்து மக்களுக்கும் தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்துவருகின்றனர்.
இந்தநிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ‘கர்நாடகாவில் வெற்றியைத் தந்த மக்களுக்கு நன்றி... ஏழை மக்களின் சக்தி வெற்றி பெற்றுள்ளது. கர்நாடகாவில் வெற்றியை பெற கடின உழைப்பையும், அர்பணிப்பையும் கொடுத்த தொண்டர்களுக்கும், கட்சித் தலைவர்களுக்கும் நன்றி.. இந்த வெற்றி எல்லா மாநிலத்திலும் தொடரும்.
அவதூறான மொழியைப் பேசி நாங்கள் சண்டையிடவில்லை. நாங்கள் கர்நாடகா மாநிலத்தின் ஏழைகளுக்காக சண்டையிட்டோம். வெறுப்பு அரசியல் கர்நாடகாவில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் அன்பு வெற்றி பெற்றுளது. காங்கிரஸ் கட்சி அளித்த ஐந்து வாக்குறுதிகள் கட்டாயம் நிறைவேற்றப்படும்’ என்று தெரிவித்தார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இந்தநிலையில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், ‘கர்நாடகத்தில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துகள்.
வெறுப்பு அரசியல் தோற்கடிக்கப்பட்டுள்ளது... மக்களுக்கு நன்றி - ராகுல் காந்தி நெகிழ்ச்சி
Congrats @INCIndia on spectacular winning of Karnataka. The unjustifiable disqualification of brother @RahulGandhi as MP, misusing premier investigative agencies against political opponents, imposing Hindi, rampant corruption have all echoed in the minds of Karnataka people while…
— M.K.Stalin (@mkstalin) May 13, 2023
திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. அடுத்து, 2024 பொதுத்தேர்தலிலும் வெல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்! இந்தியாவில் மக்களாட்சியையும், அரசியலமைப்பு விழுமியங்களையும் மீட்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Karnataka Election 2023