முகப்பு /செய்தி /தமிழ்நாடு / இந்த வெற்றியைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தைக் கைப்பற்றுவோம்- கே.எஸ்.அழகரி

இந்த வெற்றியைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தைக் கைப்பற்றுவோம்- கே.எஸ்.அழகரி

கே.எஸ் அழகிரி

கே.எஸ் அழகிரி

இந்த வெற்றியின் மூலம் அடுத்ததாக நாடாளுமன்றத்தைக் கைப்பற்றுவோம் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கர்நாடகா மாநிலத்தில் கிடைத்துள்ள மகத்தான வெற்றி எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சிதம்பரத்தில் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பிரத்யேகப் பேட்டியளித்தார். அப்போது அவர், ’ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தின் காரணமாக இந்த வெற்றி ஏற்பட்டுள்ளதாகவும்

அதிகாரம் சாராமல் அரசியலை அவர் தேர்ந்தெடுத்தார். தன்னை முன்னிலைப்படுத்தாமல் கொள்கைகளை. லட்சியங்களை முன்னிலைப்படுத்தினார். மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரிக்கு இணையாக ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம் அமைந்தது.

மோடி அரசாங்கத்தின் கடந்த கால தவறான கொள்கைகள், அரசு நடைமுறைகள் மக்களை முகம் சுளிக்க வைத்தது. ஆரம்பத்தில் புது அரசு என்று இருந்தார்கள். காலம் செல்ல செல்ல செயல்படாத அரசு என்று புரிந்து கொண்டார்கள். கருப்பு பணத்தை ஒழிக்கிறேன் என்று சொன்னார்கள். இதுவரை ஒன்றும் நடைபெறவில்லை.

விவசாயத்தை இரண்டு மடங்காக ஆக்குகிறேன் என்று சொன்னார். குறைந்தபட்சம் கொள்முதல் விலையை கூட அவர் உயர்த்தவில்லை. தவறான வரி விகிதத்தால்  வியாபாரிகளை அவதிக்கு உள்ளாக்கினார்கள். பண மதிப்பிழப்பு என்பது இந்திய பொருளாதாரத்தை சிதைத்தது. இந்தியாவினுடைய தொழில்துறை வீழ்ச்சி அடைந்தது. பண வீக்கம் அதிகரித்தது. நாட்டினுடைய மொத்த வருவாய் குறைந்தது. மக்கள் எல்லா இடத்திலும் சிரமப்பட்டார்கள்.

நாளை முக்கிய முடிவு எடுக்கப்படும் - முதல்வர் பதவி குறித்து டி.கே சிவகுமார் சூசகம்

மோடி அரசாங்கம் மேற்கண்டவைகளில் கவனம் செலுத்தாமல் ஜாதி, மதம், இன மோதல்களை வைத்து வெற்றி பெறலாம் என நினைத்தார்கள். எனவே அவர்கள் வெற்றி பெறவில்லை. தோல்வி அடைந்தார்கள். எனவே இந்த வெற்றியின் மூலம் அடுத்ததாக நாடாளுமன்றத்தை கைப்பற்றுவோம்’ என்று தெரிவித்தார்.

First published:

Tags: Karnataka Election 2023