முகப்பு /செய்தி /தமிழ்நாடு / வளமான துறைகளுடன் துணை முதல்வர் பதவி... டி.கே.சிவக்குமாரை சமாதானம் செய்தது எப்படி..?

வளமான துறைகளுடன் துணை முதல்வர் பதவி... டி.கே.சிவக்குமாரை சமாதானம் செய்தது எப்படி..?

டி.கே.சிவகுமார்

டி.கே.சிவகுமார்

துணை முதலமைச்சர் பதவி டி.கே.சிவக்குமாருக்கு மட்டும் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றிய நிலையில், முதலமைச்சர் பதவிக்கு சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவியது. இந்த நிலையில் கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக சித்தராமையாவை நியமிக்க காங்கிரஸ் தலைமை முடிவுசெய்துள்ளதாக கூறப்படுகிறது.

பெங்களூரில் உள்ள காண்டீரவா மைதானத்தில் முதலமைச்சர் பதவியேற்பு விழா நாளை மறுநாள் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் டி.கே.சிவக்குமாரை காங்கிரஸ் சமாதானப்படுத்தியது எப்படி என்பது குறித்தான தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில் டி.கே.சிவக்குமாருடன் நேற்று 4 கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன எனவும், ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே, சுர்ஜேவாலா, கே.சி.வேணுகோபால் ஆகியோர் டி.கே.சிவக்குமாருடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அதிகாலை 1.15 மணியளவில் முதலமைச்சர் பதவியை பகிர்ந்தளிப்பதற்கு டி.கே.சிவக்குமார் சம்மதித்ததாகவும் ஆனால் முக்கிய இலாகாக்களான மின்சாரம், நீர்வளத் துறைகள் தனக்கு ஒதுக்கப்பட வேண்டுமென டி.கே.சிவக்குமார் நிபந்தனை விதித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் தனக்கு நெருக்கமான அனைவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து,  துணை முதலமைச்சர் பதவி டி.கே.சிவக்குமாருக்கு மட்டும் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

First published:

Tags: Congress, DK Shivakumar, Karnataka Election 2023, Siddaramaiah