முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அதிர்ஷ்டம் இல்லாதவரா அண்ணாமலை?... முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி விமர்சனம்..!

அதிர்ஷ்டம் இல்லாதவரா அண்ணாமலை?... முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி விமர்சனம்..!

அண்ணாமலை - கே.சி.பழனிசாமி

அண்ணாமலை - கே.சி.பழனிசாமி

karnataka assembly election results 2023 | கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் இணை பொறுப்பாளராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பணியாற்றினார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.  பெரும்பான்மைக்கு 113 இடங்கள் போதும் என்ற நிலையில், காங்கிரஸ் 132 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 64 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதனால் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியமைக்கப் போவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “அதிர்ஷ்டம் இல்லாதவரா அண்ணாமலை?. கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். கர்நாடகாவில் தேர்தல் இணைப் பொறுப்பாளராக பொறுப்பேற்றார், ஆட்சி பறிபோனது. தற்பொழுது தென் மாநிலங்களில் அதிகமாக அண்ணாமலை முன்னிலைபடுத்தப்படுகிறார். அவர் தீவிரமாக களப்பணியாற்றி 2024-ல் மோடியின் ஆட்சியமைக்கும் வாய்ப்பை பறித்துவிடுவாரா?” என்று பதிவிட்டுள்ளார்.

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் இணை பொறுப்பாளராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பணியாற்றினார். வேட்பாளர் தேர்வு முதல் பரப்புரை வரை அனைத்து பணிகளிலும் தீவிர கவனம் செலுத்தினார். இந்த நிலையில் கர்நாடகாவில் பாஜக தோல்வி முகத்தை சந்தித்துள்ள நிலையில், அண்ணாமலை மீது இவ்வாறான விமர்சனத்தை முன்வைத்துள்ளார் கே.சி.பழனிசாமி

First published:

Tags: Karnataka Election 2023