முகப்பு /செய்தி /தமிழ்நாடு / “பாஜகவுக்கு மரண அடி...” - கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து கே.பாலகிருஷ்ணன் கருத்து..!

“பாஜகவுக்கு மரண அடி...” - கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து கே.பாலகிருஷ்ணன் கருத்து..!

மோடி, அமித்ஷா -கே.பாலகிருஷ்ணன்

மோடி, அமித்ஷா -கே.பாலகிருஷ்ணன்

karnataka assembly election results 2023 | பாஜகவிற்கும், மோடி, அமித்ஷா கூட்டணிக்கும் ஏற்பட்டிருக்கின்ற மரண அடி என்பது தான் உண்மை என கே.பாலகிருஷ்ணன் கருத்து.

  • Last Updated :
  • Viluppuram, India

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 224 இடங்களில் ஆட்சியமைக்க 113 தொகுதிகள் தேவை. காங்கிரஸ் 132 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. பாஜக 64 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது.

தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியுள்ளது. பெரும்பான்மைக்கு குறைவான இடங்களில் முன்னிலையில் உள்ள பாஜக ஆட்சியை இழக்கிறது. காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருவதால் அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “கர்நாடகாவில் பாஜக மிகப் பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க இருக்கிறது. கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் இந்திய அரசியலில் ஒரு திருப்புமுனை தேர்தலாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க; கர்நாடகாவில் தொடர்ந்து முந்தும் காங்கிரஸ்... கொண்டாட்டத்தில் தொண்டர்கள்...!

கர்நாடகாவில் மோடி, அமித்ஷா ஆகியோர் வீதி, வீதியாக சென்று ஓட்டு கேட்டும் கூட பாஜக மிகப் பெரிய தோல்வி அடைந்துள்ளது. இது கர்நாடகாவில் பாஜகவிற்கு ஏற்பட்ட தோல்வி மட்டுமல்ல. அகில இந்திய பாஜகவிற்கும், மோடி, அமித்ஷா கூட்டணிக்கும் ஏற்பட்டிருக்கின்ற மரண அடி என்பது தான் உண்மை.

இமாச்சல பிரதேச தேர்தல், டில்லி கார்ப்பரேஷன் தேர்தல், சிம்லா மேயர் தேர்தல், தற்போது கர்நாடகா தேர்தல் என அடுத்தடுத்த தேர்தல்களில் தொடர் தோல்விகளை பாஜக சந்தித்து வருகிறது. 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக படுதோல்வி அடைவதற்கு இந்த தேர்தல்கள் எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது" என்று கூறினார்.

top videos

    செய்தியாளர்; குணாநிதி ஆனந்தன்

    First published:

    Tags: Karnataka Election 2023