முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியா? கோவையில் நிர்வாகிகள் முன்னிலையில் கமல் சூசகம்

நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியா? கோவையில் நிர்வாகிகள் முன்னிலையில் கமல் சூசகம்

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

தேர்தல் கூட்டணி குறித்து எல்லாம் இப்போது பேச வேண்டாம். அதற்கு நேரம் இன்னும் இருக்கிறது என மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

  • Last Updated :
  • Coimbatore, India

கோயம்புத்தூர் மாவட்டம் சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் நீதி மையம் கட்சியின் கோவை, சேலம் மண்டல நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்  நடைபெற்றது.

நாடாளுமன்றத் தேர்தல் முன்னேற்பாடு குறித்த இந்தக் கூட்டத்தில் , கமல்ஹாசன் கலந்துகொண்டார். கலந்துரையாடல் கூட்டத்தில் அக்கட்சியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மூடப்பட்ட அரங்கத்தில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் கமல்ஹாசன் பேசினார். அப்போது அவர், ‘ஜனநாயகத்திற்கு ஆபத்து உள்ளது என்கிறார்கள். ஜனநாயகத்தை ஒரு பிள்ளை வளர்ப்பது போல பார்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்த அவர், குறுக்கு வழி கண்டுபிடிக்கவே பலரும் முயற்சி செய்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘பூட்டு தயாரிக்கும் போதே சாவியையும் கண்டுபிடிக்கிறார்கள் எனவும், என் வீட்டில் குளியல் அறைக்கும், பாத்ரூமுக்கும் தான் கதவு இருக்கும். திறந்த கதவு தான் என் வீடு எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்த அவர், ‘மற்றவர்களுக்கு தேவைப்படுவதை பதுக்கி வைத்தால் அங்கு பூட்டு வேண்டும். மற்றவர்களுக்கு நல்ல பண்புகளை கொடுக்கும் வீடுகளுக்கு பூட்டு தேவை இல்லை எனவும் தெரிவித்தார். தலைமைப் பொறுப்பு என்பது மேடை ஏறி பேசுவது மட்டுமல்ல. ஒவ்வொரு சின்ன தொகுதிக்கும் 6,000 பேர் வேண்டும் என தெரிவித்த அவர் புது கட்சி ஆரம்பித்தால் எவ்வளவு வேகமாக வேலை செய்வீர்களோ, அவ்வளவு வேகமாக வேலை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்த அவர், ‘பூர்த்தி செய்யப்படாத இடங்கள் அனைத்தும் பூர்த்தி செய்ய வேண்டும். உங்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் தான் பொறுப்பும் அங்கீகாரமும் வழங்க வேண்டும் என தெரிவித்த அவர், மற்ற கட்சிகள் செய்கிறார்களே என்று கூறிகொண்டு இருக்க வேண்டாம். குறை கூறுவதை மட்டுமே வைத்திருப்பவர்களுக்கு செவி சாய்க்க மாட்டேன் எனவும் தெரிவித்தார்.

ஆக்கபூர்வமான செயல்களுக்கு மட்டுமே செவி சாப்பேன். நம் மீது மக்கள் வைத்திற்கும் நம்பிக்கை ஈரோட்டிலும் தெரிந்தது என தெரிவித்த அவர், தேர்தல் கூட்டணி குறித்து எல்லாம் இப்போது பேச வேண்டாம். அதற்கு நேரம் இன்னும் இருக்கிறது என தெரிவித்தார்.

மக்களை மிரட்டி வாழும் எந்த அரசும், பிரிட்டிஷ் அரசாக இருந்தாலும் எந்த அரசாக இருந்தாலும், என்னை மாதிரி ஆட்கள் பயப்படமாட்டார்கள் என தெரிவித்த அவர், என்னிடம் காலையில் ராகுல் காந்தி பேசினார். அதற்கு முன்னதாக கர்நாடகா தலைமை காங்கிரசில் இருந்து கடிதம் வந்தது என அவர்கள் வெற்றிக்கு ஒத்துழைப்பு கேட்டு இருக்கின்றனர் எனவும் அழைப்புகளுக்கான முடிவை பின்னர் எடுப்பேன் தெரிவித்தார்.

ஐடி ரெய்டு மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது... உதயநிதி ஸ்டாலின்

top videos

    திராவிடம் என்றால் 2 கட்சிகள் என்கிறார்கள். திராவிடம் நாடு தழுவியது என்கிறோம் நாம் என தெரிவித்த அவர், இறையான்மைக்கு ஆபத்து என்று யார் அழைத்தாலும் செல்வேன். எனக்கு இறை நம்பிக்கை இல்லை என்றாலும் நீங்கள் சாமி கும்பிடும் உரிமையை பறித்தால் குரல் கொடுப்பேன் எனவும் தெரிவித்தார். நீங்கள் செய்யும் வேலை தான் நான் எடுக்கும் முடிவுகளை முடிவு செய்யும் எனவும், நான் 2024 க்கு என்ன நல்ல முடிவு எடுக்க வேண்டும் என நினைக்கிறீர்களோ? அதற்கு இப்போதே வியர்வை சிந்த வேண்டும் எனவும் கட்சியினர் மத்தியில் தெரிவித்தார்.

    First published:

    Tags: Kamal hassan, Makkal Needhi Maiam