முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை வழக்கு: குற்றவாளிகளின் பெயர்களை நீக்கியதாக மாணவியின் தாயார் புகார்

கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை வழக்கு: குற்றவாளிகளின் பெயர்களை நீக்கியதாக மாணவியின் தாயார் புகார்

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு

குற்றப்பத்திரிகையில் முக்கிய குற்றவாளிகளின் பெயர்களை நீக்கியது ஏன் என்று உயிரிழந்த ஸ்ரீமதியின் தாயார் கேள்வி எழுப்பியுள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu |

கடந்தாண்டு ஜூலை மாதம், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மேல்நிலைப்பள்ளியில், 12ஆம் வகுப்பு படித்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தில் பள்ளி சூறையாடப்பட்டது. மாணவி மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த சிபிசிஐடி அதிகாரிகள், பள்ளி தாளாளர், செயலாளர், பள்ளி முதல்வர் உட்பட 5 பேரை கைது செய்தனர்.

பின்னர் அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இதனிடையே, இவ்வழக்கு தொடர்பாக மே 15ம் தேதி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் 1,200 பக்க குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி தாக்கல் செய்தது.

இந்நிலையில், குற்றப்பத்திரிகையின் நகல் கேட்டு ஸ்ரீமதியின் தாயார் செல்வி மனு அளித்துள்ளார். அதன் பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அவர், சிபிசிஐடி விசாரணையில் தனக்கு நம்பிக்கையில்லை என்று கூறினார்.

இதையும் வாசிக்கஇறந்த உடலை சுமந்து நடக்கும் அவலம் இனியும் தமிழகத்தில் நடக்கக்கூடாது - அன்புமணி ராமதாஸ்

குற்றப்பத்திரிகையில் முக்கிய குற்றவாளிகளின் பெயர்களை நீக்கியது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர், இவ்வழக்கை, தனி நீதிபதி கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

First published:

Tags: Kallakurichi