முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கலாஷேத்ராவில் பாலியல் புகார்: கேரளா விரைந்த தமிழ்நாடு காவல்துறை

கலாஷேத்ராவில் பாலியல் புகார்: கேரளா விரைந்த தமிழ்நாடு காவல்துறை

காட்சிப் படம்

காட்சிப் படம்

புகார் அளித்த மாணவியுடன் பயின்ற மற்ற மாணவிகளிடமும் விசாரணை நடத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்

  • Last Updated :
  • Tamil Nadu, India

கலாஷேத்ராவில் பாலியல் புகார் அளித்த மாணவியிடம் விசாரணை நடத்த அடையார் போலீசார் கேரளா சென்றுள்ளனர்.

சென்னை கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் உள்ள ருக்மிணி தேவி நுண்கலைக் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக மாநில மகளிர் ஆணையம் நடத்திய விசாரணையில், 2008-ஆம் ஆண்டு முதல் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளானதாக முன்னாள் மாணவிகள் சிலர் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், கேரளாவைச் சேர்ந்த முன்னாள் மாணவி ஒருவர் அளித்த புகாரில், 2017 முதல் 2019ம் ஆண்டு வரை தாம் கல்லூரியில் பயின்ற போது பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில், உதவி பேராசிரியர் உள்ளிட்ட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையும் வாசிக்க: கலாஷேத்ரா பாலியல் புகார்... உதவிப் பேராசிரியர் மீது வழக்குப் பதிவு.. முடிவுக்கு வந்த மாணவர்கள் போராட்டம்..!

இதையடுத்து, பாலியல் புகார் அளித்த மாணவி கேரளாவில் வசித்து வருவதால், அவரிடம் விசாரணை நடத்த அடையாறு காவல்துறையினர் அங்கு சென்றனர். மேலும், புகார் அளித்த மாணவியுடன் பயின்ற மற்ற மாணவிகளிடமும் விசாரணை நடத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

top videos
    First published:

    Tags: Tamil Nadu