சென்னை கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் உள்ள ருக்மிணி தேவி நுண்கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக, மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவி குமரி கல்லூரிக்கு சென்று விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து கலாஷேத்ரா இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன், துணை இயக்குநர் பத்மாவதி ஆகியோர் மாநில மகளிர் ஆணையத்தில் இன்று ஆஜராகினர்.
அவர்களிடம் பாலியல் தொல்லை தொடர்பாக எத்தனை மாணவிகள் புகார் அளித்துள்ளனர், புகாரின் மீது கல்லூரி விசாரணை குழு சார்பில் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து கேட்டறியப்பட்டதாக தெரிகிறது. தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இயக்குனர் ரேவதி பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து மாணவிகள் அளித்த புகார் தொடர்பான ஆவணங்களை மாநில மகளிர் ஆணையத்தில் சமர்பித்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் கலாஷேத்ராவில் கடந்த 2018 முதல் மூன்று பாலியல் புகார்கள் வந்துள்ளதாக தெரிய வந்துள்ளதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் வந்த பாலியல் புகார்கள் குறித்த அறிக்கை கேட்டுள்ளதாகவும் தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமரி தெரிவித்தார்.
இதையும் படிக்க : கலாஷேத்ரா பாலியல் புகார் : கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மன் கைது
தொடர்ந்து நியூஸ் 18 தமிழ்நாடு தொலைகாட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், பாலியல் புகார் குறித்து கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள், முன்னாள் மாணவிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பான அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் இன்று சமர்பிக்கவுள்ளதாகவும் தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவி குமரி தெரிவித்தார்.
இதை தொடர்ந்து கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் புகார் தொடர்பாக உதவிப் பேராசிரியர் ஹரிபத்மன்,கலாஷேத்ரா மனநல ஆலோசகர் உள்ளிட்ட 4 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் மாணவிகளிடம் வாய்மொழியாக தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dismissed, Sexual harassment