முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சாப்பாடு நேரம் வந்துடுச்சு.. இப்ப இட்லி, பாயாசம் பேசுவது சரியல்ல - துரைமுருகன் பேச்சால் பேரவையில் சிரிப்பலை..

சாப்பாடு நேரம் வந்துடுச்சு.. இப்ப இட்லி, பாயாசம் பேசுவது சரியல்ல - துரைமுருகன் பேச்சால் பேரவையில் சிரிப்பலை..

துரைமுருகன்

துரைமுருகன்

திமுக அரசின் வேளாண் பட்ஜெட் என்பது பழைய உப்புமாவாக உள்ளதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.

  • Last Updated :
  • Chennai, India

சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ.எஸ்.மணியன், திமுக அரசின் வேளாண் பட்ஜெட் என்பது பழைய உப்புமாவாக உள்ளதாக தெரிவித்தார்.

அதற்கு பதில் அளித்த வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்; ரவை உப்புமா, அரிசி உப்புமா, கோதுமை உப்புமா என்று உப்புமாவில் பலவகை உள்ளது. இப்போது உறுப்பினர்கள் பலரும் கோதுமை உப்புமா சாப்பிட தொடங்கி இருக்கிறார்கள். கோதுமை உப்புமாவினால் உடலுக்கு நல்லது தான் என பேசினார்.நாங்களாவது ஏதாவது உப்புமா செய்து இருக்கிறோம், நீங்கள் பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்து என்ன செய்தீர்கள்? என கேள்வி எழுப்பினார்.

விவசாய பட்ஜெட் என்பது விவசாயிகள் அனைவராலும் பாரடக்கூடிய பட்ஜெட்டாக இருக்கின்றது. இப்பொழுதுதான் தொடங்கி இருக்கின்றோம். தவழும் குழந்தையாக இருந்து, தற்போது நடக்கிற குழந்தையாக இருக்கின்றது. எதிர்காலத்தில் நன்கு ஓடக்கூடிய ஆரோக்கியமான குழந்தையாக மாறும்.விவசாயிகள், திரைத்துறையினர் என அனைவர் தரப்பிலும் பாராட்டுகள் வருகிறது. அதிமுக ஆட்சியில் தான் 40 விவசாயிகள் பட்டினி சாவு ஏற்பட்டு இறந்திருப்பதாக, தெரிவித்தார்.

அப்போது குறிக்கிட்டு பேசிய அவை முன்னவர் துரைமுருகன், மணி 1 ஆகப்போகுது, சாபாட்டு நேரம், இந்த நேரத்துல இட்லி, பாயாசம், வடை என உறுப்பினர்கள் பேசுவது சரியில்ல என தெரிவித்ததால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

First published:

Tags: Durai murugan, Tamil News, TN Assembly