முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நாடாளுமன்றத்தில் செங்கோல் : தமிழர் கலாச்சாரம் பிரதிபலிப்பது பெருமைக்குரியது - அமைச்சர் சேகர் பாபு

நாடாளுமன்றத்தில் செங்கோல் : தமிழர் கலாச்சாரம் பிரதிபலிப்பது பெருமைக்குரியது - அமைச்சர் சேகர் பாபு

அமைச்சர் சேகர் பாபு

அமைச்சர் சேகர் பாபு

உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற தாரக மந்திரத்தோடு தான் திமுக இயங்கி வருகிறது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Chennai [Madras], India

நாடாளுமன்ற புதிய கட்டிடத்தை குடியரசுத் தலைவர்தான் திறக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் திமுக உறுதியாக உள்ளது என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் 2023-2024 ஆம் நிதியாண்டின் புதிய அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோணம்பேடு அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடம் அமைக்கப்பட உள்ளது.

இந்த பணிகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சேகர் பாபு சந்தித்தார். அப்போது அவர், ‘கருணாநிதி ஆட்சி காலத்தில் இருந்து மத்திய அரசுடன் உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற தாரக மந்திரத்தோடு தான் இயங்கி வருகிறோம். அண்மையில் ஆளுனருடன் ஏற்பட்ட சர்ச்சையின் போது கூட முதல்வர் தெளிவாக விளக்கி கூறினார்.

மேலும் தமிழகத்தில் செய்யப்பட்ட செங்கோல் நாடாளுமன்றத்தில் வைப்பதன் மூலம், தமிழர் கலாச்சாரம் பிரதிபலிப்பது பெருமைக்குரியது. ஆனால் நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் தான் திறக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் திமுக உறுதியாக உள்ளது. குடியரசுத் தலைவர் திறந்து வைத்தால் தான் ஏற்புடையதாக இருக்கும் என்பது முதல்வரின் நிலைப்பாடு என தெரிவித்தார்.

top videos

    செய்தியாளர் : கண்ணியப்பன் (திருவள்ளூர்)

    First published:

    Tags: Central Vista, DMK, Minister Sekar Babu