முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மெட்ரோ ரயில்கள் வாங்கியதில் முறைகேடு? - அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுப்பு

மெட்ரோ ரயில்கள் வாங்கியதில் முறைகேடு? - அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

Chennai Metro | டெண்டரில் குறைந்த தொகையை முன்வைத்த எல் ஒன் நிறுவனமான அல்ஸ்டாம் தேர்வு செய்யப்பட்டதாகவும் விளக்கம்

  • Last Updated :
  • Tamil Nadu, India

மெட்ரோ ரயில் நிறுவன டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக அண்ணாமலை குற்றம்சாட்டிய நிலையில் அது முழுக்க முழுக்க தவறான தகவல் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ரயில்பெட்டிகள் வாங்கியதில் 200 கோடி ரூபாய் லஞ்சம் கைமாறியதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி இருந்தார். டெண்டரைப் பெற்ற பிரான்ஸை சேர்ந்த அல்ஸ்டாம் போக்குவரத்து நிறுவனத்திற்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்நிலையில், குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானது என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், எந்த ஒளிவு மறைவுமின்றி வெளிப்படைத்தன்மையுடன் நேர்மையான முறையில் டெண்டர் விடப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: இப்படி பேசி பேசித்தான் அண்ணாமலை பெரிய ஆளாகிறார்” - ஈபிஎஸ் காட்டமான விமர்சனம்!

உள்நாட்டில் பெட்டிகளை தயாரித்தால் விலை குறைவாக கிடைக்கும் என்பதால் டெண்டர் தொடர்பாக கூடுதல் சேர்க்கை வெளியிடப்பட்டது. அதன்படி உள்நாட்டில் பெட்டிகள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சுங்கக் கட்டண சலுகை கிடைக்கும். மேலும் தொழில் நுட்ப அடிப்படையில் மிட்சுபிஷி உள்ளிட்டவற்றின் டெண்டர் நிராகரிக்கப்பட்டதாகவும், டெண்டரில் குறைந்த தொகையை முன்வைத்த எல் ஒன் நிறுவனமான அல்ஸ்டாம் தேர்வு செய்யப்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

top videos

    இதன் மூலம் பொதுமக்களின் பணம் சுமார் 250 கோடி ரூபாயை தாங்கள் சேமித்ததாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே, அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மைக்கு புறம்பானவை என்று கூறியுள்ள மெட்ரோ, எந்த போலி நிறுவனத்துடனும் தொடர்பு இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளது.

    First published:

    Tags: Annamalai, BJP, Chennai metro, CM MK Stalin