முகப்பு /செய்தி /தமிழ்நாடு / உதயநிதி பேசியதில் என்ன தவறு..? மகனுக்காக காரசாரமாக விவாதித்த முதலமைச்சர் ஸ்டாலின்

உதயநிதி பேசியதில் என்ன தவறு..? மகனுக்காக காரசாரமாக விவாதித்த முதலமைச்சர் ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

மத்திய அமைச்சரின் பெயரை விமர்சனம் செய்தோ, கேலி செய்தோ அமைச்சர் பேசவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்தார்.

  • Last Updated :
  • Chennai, India

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானிய கோரிக்கையின்பது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஐபிஎல் டிக்கெட், மத்திய அமைச்சர் மற்றும் அவரது மகன் குறித்து பேசியது சமுக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் இன்று பேரவையில் பேசிய பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், "மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பெயரை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "மத்திய அமைச்சரின் பெயரை விமர்சனம் செய்தோ, கேலி செய்தோ அமைச்சர் பேசவில்லை. திரு என்று சொல்லி தான் பேசியுள்ளார். அதில் என்ன தவறு உள்ளது. தவறாக இருந்தால் நீக்க தயாராக இருக்கிறோம்", என்றார்.இதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், "அவர் பெயர் இருக்க வேண்டாம் என்று தான் சொல்கிறேன்", என்றார்.

Also Read: ஐபிஎல் டிக்கெட் கேட்ட வேலுமணி... உதயநிதி சொன்ன சுவாரஸ்ய பதில்... குலுங்கி குலுங்கி சிரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

top videos

    பின்னர் மீண்டும் பேசிய முதலமைச்சர், "அவர் பெயர் தகாத வார்த்தையா? சொல்லுங்கள். மத்திய அமைச்சரின் பெயர் தகாத வார்த்தையா? எதற்காக அவை குறிப்பில் இருந்து நீக்க சொல்கிறீர்கள்? என கூறினார். மத்திய அமைச்சர் மற்றும் அவரது மகனின் பெயர் தகாதா வார்த்தையா? ஏன் அவைக்குறிப்பில் நீக்க வேண்டும்? இதனால் அவையில் காரசார விவாதம் நடைபெற்றது.

    First published:

    Tags: DMK, IPL 2023, MK Stalin, TN Assembly, Udhayanidhi Stalin