முகப்பு /செய்தி /தமிழ்நாடு / இந்திராகாந்தி முதல் ராகுல்காந்தி வரை.. அரசியல்களம் கண்ட தகுதி நீக்கங்கள்!

இந்திராகாந்தி முதல் ராகுல்காந்தி வரை.. அரசியல்களம் கண்ட தகுதி நீக்கங்கள்!

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கு முன்பாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட முக்கிய தலைவர்கள் குறித்து பார்க்கலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

1971-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அரசு ஊழியராக இருந்த யஷ்பால் கபூர் இந்திரா காந்திக்கு முகவராக செயல்பட்டார். இந்திரா காந்தியிடம் தோல்வியடைந்த ராஜ் நாராயண், அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், இந்திரா காந்தியின் வெற்றியை ரத்து செய்தது

தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் 2014 ஆம் ஆண்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் எம்எல்ஏ பதவியை இழந்தார். மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிக்கிய பிகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் 2013 ஆம் ஆண்டு மக்களவையில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை அதன் பிறகு 6 ஆண்டுகள் என மொத்தம் 11 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கப்பட்டது. அதே வழக்கில் ஐக்கிய ஜனதா தளத்தின் ஜெக்தீஷ் ஷர்மாவின் எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது.

இதேபோல மருத்துவக்கல்வி இடங்கள் ஒதுக்கீடு முறைகேட்டில் சிக்கிய காங்கிரஸ் எம்.பி. ரஷீத் மசூத்தின் பதவி 2013-ஆம் ஆண்டு பறிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட முதல் எம்பி ரஷீத் மசூத் தான், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆசம் கான், 2019 மக்களவைத் தேர்தலின் போது பிரதமர் மோடி, ஆதித்யநாத் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஆசம் கானுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் எம்.எல்.ஏ பதவியை இழந்தார்

தேர்தல் ஆணையத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட முதல் அரசியல்வாதி உம்லேஷ் யாதவ் . தேர்தல் செலவீனங்களை குறைத்துக் காட்டியதற்காக உம்லேஷ் யாதவை தகுதி நீக்கம் செய்த தேர்தல் ஆணையம் அவர் தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை விதித்தது.. உம்லேஷ் யாதவ் உத்தர பிரதேசத்தின் பிசவுலி தொகுதியில் 2007 ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

கொலை முயற்சி வழக்கில், லட்சத்தீவைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் எம்.பி முகமது பைசலுக்கு லட்சத்தீவு நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். எனினும், தீர்ப்பை எதிர்த்து முகமது பைசல் மேல்முறையீடு செய்ததை அடுத்து தண்டனையை நீதிமன்றம் நிறுத்திவைத்து உத்தரவிட்டது. முகமது பைசலின் சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதால் லட்சத்தீவு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் நிறுத்திவைத்துள்ளது.

First published:

Tags: Rahul Gandhi