இந்தியாவில் ஆணவக் கொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருவது வேதனை அளிக்கிறது. மத்திய அரசு ஆணவக் கொலைத்தடுப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று திருமாவளன் வலியுறுத்தியுள்ளார்.
கிருஷ்ணகிரியில் ஆணவக் கொலைக்கு எதிராகத் தனி சட்டம் கொண்டு வரக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள வருகை தந்த அக் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ’கிருஷ்ணகிரி மாவட்டம் ஆணவ கொலைகள் தொடர்ந்து நடக்கிற மாவட்டமாக உள்ளது. ஏற்கனவே சுவாதி - நந்தீஸ் இருவரும் ஆணவக்கொலை செய்யப்பட்டார்கள்.
அண்மையில் கிருஷ்ணகிரி அருகே ஒரே சமூகத்தைச் சேர்ந்த ஜெகன் - சரண்யா ஒரே சமூகத்தில் திருமணம் செய்திருந்தாலும், உட்சாதி அடிப்படையில் ஜெகன் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். ஊத்தங்கரை அருகே காதல் திருமணம் செய்து கொண்ட சுபாஷ் ஆணவப் படுக்கொலை செய்யப்பட்டார் . அதனை தடுக்க முயன்ற அவரது தாயார் கண்ணம்மாளையும் சுபாஷின் தந்தை தண்டபாணி வெட்டி படுகொலை செய்தார். இதில் படுகாயம் அடைந்த அனுசியா சிகிச்சை பெற்று வருகிறார். இந்த மூன்று சம்பவங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்துள்ளது.
இதையும் படிக்க : டெல்லி செல்லும் இபிஎஸ்- அமித்ஷாவுடன் சந்திப்பு
வழக்கமாக வட இந்தியாவில் சாதி விட்டு சாதி திருமணம் செய்பவர்களை கொலை செய்வதும், பொது இடங்களில் அவமானப்படுத்துவதும், சித்தரவதை செய்தும், நஞ்சு கொடுத்து படுகொலை செய்யும் போக்கு கேள்விபட்டு உள்ளோம்.
தமிழகத்தில் இதுபோன்ற சாதி ஆவணக் கொலைகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஆணவக் கொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருவது வேதனை அளிக்கிறது. மத்திய அரசு ஆணவ கொலை தடுப்புச் சட்டத்தை இயற்ற வேண்டுமென தொடர்ந்து குரல் ஒலித்து வருகிறது. ஆனால் மத்திய அரசு சட்டம் இயற்றுவதில் தேக்கம், தயக்கம், இருந்து வருகிறது.
உச்ச நீதிமன்றம் ஆணவக் கொலைகளை கொடூரமான கொலைகளாகக் கருதி அதனை தடுக்க வேண்டும் என அதற்கான வழிகாட்டுதலை வழங்கி உள்ளது. ஆனால் ஆணவ கொலை தொடர்பான உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றுவதில்லை. தொடர்ந்து நடைபெறும் ஆணவக் கொலைகள் அதிர்ச்சி அளிக்கிறது. ஆணவப்படுக்கொலை தடுப்புச் சட்டம் வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தற்போது திமுக அரசு ஆணவ கொலைக்கு எதிரான தடுப்புச் சட்டத்தை கொண்டுவரவேண்டும் என தோழமைக் கட்சி என்கிற முறையில் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.
செய்தியாளர் : குமரேசன் (கிருஷ்ணகிரி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Honour killing, Krishnagiri, Thirumavalavan, VCK