முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 100-ஐ நெருங்கிய கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 100-ஐ நெருங்கிய கொரோனா தொற்று

கொரோனா பரிசோதனை

கொரோனா பரிசோதனை

Coronavirus : கொரோனா பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 100-ஐ நெருங்கியுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதன்படி, தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் புதிதாக 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 608-ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிராவில் புதிதாக நேற்று 397 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. நாடு தழுவிய அளவில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ஆயிரத்து 890 பேருக்கு தொற்று பரவியுள்ளது. இது, கடந்த 210 நாட்களில் இல்லாத உயர்வு என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

top videos

    கொரோனா பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மருத்துவமனைகளின் தயார்நிலை குறித்து வரும் 10 மற்றும் 11-ம் தேதிகளில் ஒத்திகை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Corona, Corona positive, Corona Symptoms, Covid-19, Tamil Nadu