முகப்பு /செய்தி /தமிழ்நாடு / முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்... எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்... எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

எடப்பாடி பழனிசாமி - மு.க.ஸ்டாலின்

எடப்பாடி பழனிசாமி - மு.க.ஸ்டாலின்

கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்தினரை நாளை சந்தித்து ஆறுதல் கூற உள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

  • Last Updated :
  • Tiruchirappalli, India

தமிழ்நாட்டில் கள்ளச் சாராய மரணங்களுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய ஈபிஎஸ், மரக்காணத்தில் கள்ளச் சாராயம் விற்பனை நடைபெறுவதாக செய்தி வெளியான பிறகும் திமுக அரசு கண்டு கொள்ளாமல் இருந்ததாக விமர்சித்தார். மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற நாளில் இருந்து தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை, திருட்டு, கஞ்சா விற்பனை, கள்ளச் சாராய விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாகவும் சாடினார்.

காவல்துறையினரை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பது இல்லை என்றும், முதலமைச்சரின் குடும்ப உறுப்பினர்கள் தலையீடு காரணமாகவே சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்தினரை நாளை சந்தித்து ஆறுதல் கூற உள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

First published:

Tags: CM MK Stalin, Edappadi Palaniswami, EPS