முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆருத்ரா மோசடி வழக்கு... 2 வாரங்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல்- பொருளாதாரக் குற்றப்பிரிவு ஐஜி விளக்கம்

ஆருத்ரா மோசடி வழக்கு... 2 வாரங்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல்- பொருளாதாரக் குற்றப்பிரிவு ஐஜி விளக்கம்

ஐஜி ஆசியம்மாள்

ஐஜி ஆசியம்மாள்

aarudhra case | ஹிஜாவு, ஐ எஃப் எஸ் ஆகிய இரு வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னும் இரண்டு வாரங்களுக்குள் ஆருத்ரா வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆருத்ரா மோசடி வழக்கில் 2 வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்யப்படும் என பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் ஐஜி ஆசியம்மாள், ‘பொருளாதார குற்றப்பிரிவில் ஜனவரி முதல் மே 15ஆம் தேதி வரை 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். பதிவு செய்யப்பட்ட 19 வழக்குகளில் 350 கோடி ரூபாய் பொதுமக்களிடம் இருந்து ஏமாற்றப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஐஎஃப்எஸ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேரிடம் இருந்து 25 அசையா சொத்துகளும், ஹிஜாவு மோசடி வழக்கில் 60 அசையா சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். ஐஎஃப்எஸ், ஹிஜாவு, ஆருத்ரா மோசடி வழக்குகளில் முக்கிய குற்றவாளிகள் வெளிநாடுகளில் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களை பிடிப்பதற்கான ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் இடங்களில் இரண்டாவது நாளாக சோதனை...

ஹிஜாவு, ஐ எஃப் எஸ் ஆகிய இரு வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னும் இரண்டு வாரங்களுக்குள் ஆருத்ரா வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார்.

top videos
    First published:

    Tags: Cheating, Cheating case