முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சாதி ரீதியாக பாகுபாடு காட்டினேனா...? சக அதிகாரி குற்றச்சாட்டுக்கு சுகாதாரத்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி விளக்கம்

சாதி ரீதியாக பாகுபாடு காட்டினேனா...? சக அதிகாரி குற்றச்சாட்டுக்கு சுகாதாரத்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி விளக்கம்

ககன்தீப்சிங் பேடி

ககன்தீப்சிங் பேடி

சாதி பாகுபாடு புகார் குறித்து ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப்சிங் பேடி விளக்கம் அளித்துள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னை மாநகராட்சியின் முன்னாள் துணை ஆணையர் மணிஷ் நர்னவாரே, தம் மீது கூறியுள்ள புகார்கள் ஆச்சரியம் அளிப்பதாக சுகாதாரத்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி பதிலளித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியில் 2021ஜூன் 14 முதல் கடந்தாண்டு ஜூன் 13 வரை மணிஷ் நர்னாவாரே துணை ஆணையராக அப்போதைய ஆணையர் ககன்தீப் சிங்கின் கீழ் பணியாற்றினார். குறிப்பிட்ட இந்த கால கட்டத்தில் சாதி ரீதியாக தம்மை விமர்சித்திருப்பதாகவும் வேண்டுமென்றே கோப்புகளில் கையெழுத்திடாமல் காக்க வைத்ததாகவும், மணிஷ் தலைமைச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

அதில் ககன்தீப் சிங் தமக்கு அளித்த அழுத்தத்தால் தற்கொலை எண்ணம் கூட தோன்றியதாக தெரிவித்துள்ளார்.

இந்த புகாருக்கு பதிலளித்துள்ள ககன்தீப் சிங், மணிஷ் மிகவும் நல்ல அதிகாரி என்றும் தனக்கு கீழ் வேலை செய்யும் அதிகாரிகளை ஒரு போதும் சாதி ரீதியாக பேசியது இல்லை என்றும் கூறியிருக்கிறார்.

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு பங்கேற்காதது ஏன்? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

இதனிடையே கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதாக, மணிஷை, ககன்தீப்சிங் பேடி பாராட்டு சான்று அளித்துள்ளார். அதன் நகல்களும் தற்போது நியூஸ் 18 தமிழ்நாடுக்கு கிடைத்திருக்கிறது. இதனிடையே தாம் கூறிய புகார் அனைத்தும் உண்மைதான் என்று மணிஷ் நர்னவாரே தெரிவித்துள்ளார்.

First published: