ராணிப்பேட்டை மாவட்டம் பொன்னை அணைக்கட்டு பகுதியில் பொதுமக்களுக்கு 3.76 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் சிறப்பு மனுநீதி நாள் விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் காந்தி, அரக்கோணம் எம்.பி.ஜெகத்ரட்சகன் ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதையும் படிக்க : ஆவடி நாசரின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது ஏன்..? பரபரப்பு தகவல்கள்..!
அப்போது பொதுமக்களிடையே பேசிய நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், “சட்டமன்றத்தின் லீடர் நான்தான் என்பதால் சட்டமன்றத்தை கவனிக்க வேண்டும், குறிப்பாக ஆளுநரை கவனிக்க வேண்டும். அதேபோல சட்டமன்றத்தில் ஆளுநர் தவறாக பேசும் போது அதிகாரிகளிடம் HE IS DOING WRONG THINGS என சுட்டிக்காட்டினேன்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து முதியோர் பென்ஷன் குறித்து நகைச்சுவையாக பேசிய அவர், கடந்த ஆட்சி காலத்தில் 38 ஆயிரம் முதியோர்களுக்கு பென்ஷன் வழங்கியதாகவும், தற்போது பென்ஷன் வழங்க வரைமுறை உள்ளதால் அதனை அதிகாரிகள் திணறுவதாகவும் கூறிய அவர், முதியோர் பென்ஷன் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் தனிப்பட்ட முறையில் இதற்காக தனி கூட்டத்தை நடத்த ஆட்சியருக்கு அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆற்றிய உரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி சில வரிகளை தவிர்த்த நிலையில், அதற்கு எதிரான தீர்மானம் முதலமைச்சர் ஸ்டாலினால் உடனடியாக கொண்டுவரப்பட்டது. அந்த சமயத்தில் நடந்ததைத்தான் அவை முன்னவராகவும் இருக்கும் துரைமுருகன் தற்போது நினைவுகூர்ந்துள்ளார்.
செய்தியாளர் : க.சிவா (ராணிப்பேட்டை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Durai murugan, Governor, RN Ravi