தமிழ்நாட்டில் 2 மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், பிப்ரவரி - மார்ச் மாதத்திற்கான மின்கட்டணத்தை செலுத்த நம்மில் பெரும்பாலானோர் தயாராகி வருகிறோம். 2 மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டணம் வசூலிக்கப்படுவதால், சிலருக்கு மின்கட்டணம் கூடுதலாக வர வாய்ப்புள்ளது. எனவே, உங்கள் மினகட்டணம் சற்று அதிகரித்து இருந்தால் அதற்கான காரணத்தை இங்கே புரிந்து கொள்ளுங்கள்.
அனைத்து வீட்டு நுகர்வோர்களுக்கு இரண்டு மாதத்திற்கு 500 யூனிட் வரை மின்கட்டணத்தில் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இதன்கீழ், முதற் 100 யூனிட் இலவசமாகவும், அடுத்த 100 (100 -200) யூனிட்களுக்கு ஒரு யூனிட் மின்சாரம் ரூ- 2.25 என்ற மானிய விலையிலும், ,200 - 300 நுகர்வில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ-4.5 என்ற மானிய விலையிலும், 300 - 400 நுகர்வில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ-6 என்ற மானிய விலையிலும் மின்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது .
உதாரணம் 1: இரண்டு மாதங்களில் நீங்கள் 500 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியிருந்தால், கீழ் கண்டவாறு மின்கட்டணம் வசூலிக்கப்படும்
முதல் யூனிட் | கடைசி யூனிட் | மொத்த யூனிட்கள் | கட்டணம் | மொத்த தொகை |
1 | 100 | 100 | 0 | 0 |
101 | 200 | 100 | 2.25 | 225 |
201 | 400 | 200 | 4.5 | 900 |
401 | 500 | 100 | 6 | 600 |
மொத்த தொகை: | ரூ. 1725 |
உதாரணம் 2 : இரண்டு மாதங்களில் நீங்கள் 315 மின்சார யூனிட் பயன்படுத்திருந்தால், கீழ்கண்டவாறு மின்கட்டணம் வசூலிக்கப்பபடும்.
யூனிட் முதல் | யூனிட் வரை | மொத்த யூனிட் | கட்டணம் | தொகை |
1 | 100 | 100 | 0 | 0 |
101 | 200 | 100 | 2.25 | 225 |
201 | 315 | 115 | 4.5 | 517.5 |
மொத்தம் | 742.5 |
இரண்டு மாதங்களில் 500 மின்சாரம் யூனிட்டிற்கு மேல் பயன்படுத்தினால், மானியம் முழுமையாக ரத்து செய்யப்படும். உதாரணமாக தற்போது இரு மாதங்களுக்கு 500 யூனிட் மின்சாரம் பயன்படுத்தினால் ரூ.1,725 மட்டும் கட்டணமாக செலுத்தினால் போதுமானது. ஆனால், 501 யூனிட் பயன்படுத்தும் போது, மானியம் முழுமையாக ரத்து செய்யப்படும்.அதன் காரணமாக, ரூ.2400 கட்டணம் செலுத்த வேண்டி வரும். அதாவது, ஒரு யூனிட் மின்சாரம் கூடுதலாக பயன்படுத்துவதற்காக ரூ.675 அதிகமாக செலுத்த வேண்டும்.
நீங்களே கணக்கீடு செய்து கொள்ளலாம்:
1. உங்களுக்கான மின்கட்டணத்தை நீங்களாகவே, கணக்கீடு செய்ய, தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழக (TANGEDCO) https://www.tnebnet.org/awp/tariffMaster?execution=e2s1 இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
2. முகப்பு பக்கத்தில்,Billing Services-ன் கீழ் உள்ள Bill Calculator என்ற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.
3. Bill Calculator பக்கத்தில், Tariff Check-ல் Domestic என்பதையும், Billing cycle என்பதில் Bi-Monthly என்பதையும்,
Consumed Units என்பதில் எவ்வளவு மின்சார யூனிட் எண்ணிக்கையை சமர்ப்பிக்கவும்.
4. உங்களுக்கான, மின்சார கட்டண விவரங்கள் திரையில் தோன்றும். அதன் அடிப்படையில், இணையவழி சேவை மூலமாகவோ அல்லது நேரடியாகவோ மின்கட்டணத்தை செலுத்தலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Electricity, Electricity bill