முகப்பு /செய்தி /தமிழ்நாடு / வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம் - சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம் - சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

வேங்கைவயல் விவகாரம்

வேங்கைவயல் விவகாரம்

வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில், விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக்கோரி தொடக்கப்பட்ட வழக்கில் சிபிசிஐடி-யை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

வேங்கைவயலில், பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில், மனிதக்கழிவு கலந்த விவகாரம் தொடர்பான விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிடக்கோரி, நெடுவாசல் பகுதியைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழ்நாடு காவல்துறையிடம் தேவையான மனித வளம் உள்ளதாகவும், CBI-க்கு மாற்றினால் தேவையான மனிதவளம் இல்லை எனத் தெரிவிப்பார்கள் என்றும் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து, கல்வி அறிவால் ஏற்படும் விழிப்புணர்வால் மட்டுமே இது போன்ற சம்பவங்களைத் தடுக்க முடியும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Also Read : தங்கும் விடுதி முதல் விருது வரை... பெண் காவலர்களுக்கு 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்!

தொடர்ந்து, இந்த வழக்கில் இதுவரை நடைபெற்ற விசாரணை குறித்தும், வழக்கின் தற்போதைய நிலைகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி காவல்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கை வரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

First published:

Tags: CBCID, Madurai High Court