முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி வழக்கு தொடர்ந்தால் அபராதம்... உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி வழக்கு தொடர்ந்தால் அபராதம்... உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஆடல் பாடல் நிகழ்வுக்கு அனுமதி கோரி பொது நல வழக்காக தாக்கல் செய்ய இயலாது என நீதிபதிகள் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆடல் பாடலுக்கு அனுமதி கோரி பொது நல வழக்கு தாக்கல் செய்தால் கடும் அபராதம் விதிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கரூர், கடவூர் சிந்தாமணிப்பட்டி பகுதியில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் திருவிழா ஜூன் 6 ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. திருவிழாவின் போது கரகம் பாவித்தல் மற்றும் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாருக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

ஒரு கிராமத்தில் கோவில் திருவிழாவில், ஆடல் பாடல் நிகழ்வுக்கு அனுமதி கோரி பொது நல வழக்காக தாக்கல் செய்ய இயலாது என்றும் அது தொடர்பாக உயர்நீதிமன்றம் கிளை தெளிவான உத்தரவு பிறப்பித்து உள்ளதாகவும் நீதிபதிகள் கூறினர்.

ஆனாலும் அந்த உத்தரவை பின்பற்றாமலும், புரிந்து கொள்ளாமலும் மீண்டும் பொது நலன் வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது என்ற நீதிபதிகள் இனிமேல், ஆடல் பாடலுக்கு அனுமதி கோரி பொது நலன் மனு தாக்கல் செய்தால், அந்த மனு தாரருக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தனர்.

மேலும் படிக்க... நெல் உள்பட 14 வகை பயிர்களின் குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு: மத்திய அரசு

மேலும், ஆடல் பாடலுக்கு அனுமதி கோரிய மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

First published:

Tags: Chennai High court, Dance, Songs