முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சாத்தான்குளம் கொலை வழக்கை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

சாத்தான்குளம் கொலை வழக்கை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி

தூத்துக்குடி

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் கோரிய மனுதாக்கல் செய்திருந்தார்

  • Last Updated :
  • Tamil Nadu, India

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை 3 மாதங்களில் முடிக்க மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் கோரிய மனுதாக்கல் செய்திருந்தார்.  சிறையில் இருந்த காலத்தை கணக்கில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும் என்றும்,  இதுவரை ஜாமின் வழங்காமல் வைத்திருப்பது இயற்கை நீதிக்கு எதிரானது எனவும் அவரது தரப்பில் வாதிடப்பட்டது.

இதையும் வாசிக்க: 12 மணி நேர வேலை மசோதாவை நிறுத்தி வைக்க என்ன காரணம்? - முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் சொன்னது என்ன?

top videos

    அதற்கு மறுப்பு தெரிவித்த சிபிஐ தரப்பு வழக்கறிஞர், ஸ்ரீதருக்கு ஜாமின் வழங்கினால் சாட்சிகள் கலைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக வாதிட்டிருந்தார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் கோரிய மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு விசாரணையை 3 மாதங்களில் முடிக்க கால வரம்பு நிர்ணயித்தும் நீதிபதி ஆணையிட்டார்.

    First published:

    Tags: Sathankulam