முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை... ஆரணியில் பெய்த ஆலங்கட்டி மழையால் மக்கள் ஆச்சர்யம்

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை... ஆரணியில் பெய்த ஆலங்கட்டி மழையால் மக்கள் ஆச்சர்யம்

மழை

மழை

சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணத்தினால் கனமழை பெய்து வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகச் சென்னை, திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. ஆரணியில் பெய்த ஆலங்கட்டி மழையைப் பார்த்து, பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், இன்று அதிகாலையிலும் கனமழை பெய்தது. வள்ளுவர் கோட்டம், புரசைவாக்கம், அண்ணா நகர் வில்லிவாக்கம் உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால், சாலைகளில் தண்ணீர் தேங்கியது. சென்னையை அடுத்த கேளம்பாக்கம், படூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால், ஓ.எம்.ஆர் சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சென்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்த நிலையில், காட்டுப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பூந்தமல்லி - போரூர் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கியது. சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் உள்ளதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், மழை நீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் நெல்லிக்குப்பம், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. பட்டாம்பாக்கம், புதுப்பேட்டை, வடலூர், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை கொட்டித்தீர்த்தது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததால், பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர்.

Also Read : சென்னையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு...வானிலை ஆய்வு மையம் தகவல்

களம்பூர், நடுக்குப்பம், படவேடு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த ஆலங்கட்டி மழையைப் பொதுமக்கள் கையில் எடுத்துப் பார்த்து ரசித்தனர். கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருவதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

First published:

Tags: Chennai, Chennai Rain, Rain updates, Weather News in Tamil