முகப்பு /செய்தி /தமிழ்நாடு / இன்று வெயில் அதிகரிக்கும்... மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்... எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்..!

இன்று வெயில் அதிகரிக்கும்... மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்... எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Heat Wave | தமிழ்நாடு, புதுச்சேரியில் படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயரக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் இன்று முதல் வருகிற 18ம் தேதி வரை வழக்கத்தை விட வெப்பநிலை 3 டிகிரி வரை அதிகரிக்கும். அதே நேரத்தில் அதிகளவு வெப்பம் தாங்க முடியாத நிலை, மயக்கம் உள்பட பல்வேறு பிரச்னை ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் அந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 18ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக் கூடும் என கூறப்பட்டுள்ளது.அதிக வெப்பநிலை இருக்கும் போது வெப்ப அழுத்தம் காரணமாக சிலருக்கு அசவுகரியம் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க; அடுத்த முதல்வர் சித்தராமையாவா? சிவக்குமாரா? - எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நடந்தது இதுதான்..!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மே 17 மற்றும் 18ஆம் தேதிகளில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு வங்கக்கடல், இலங்கை கடலோர பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

First published:

Tags: Heat Wave, Meteorological dept