ஜெயலலிதா மறைவுக்கு ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச் செல்வம் இணைந்து அ.தி.மு.கவை வழிநடத்திவந்தனர். இதற்கிடையில் ஓ.பன்னீர் செல்வத்தை ஓரம் கட்டி கட்சியின் முழுவதையும் எடப்பாடி பழனிசாமி அவரது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்தார். கட்சியின் பெரும்பான்மையான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களாக மாறினர். அதனையடுத்து, பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை அறிவிப்பைக் கொண்டுவருவதற்கு எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்தார். ஓ.பன்னீர் செல்வத்தின் கடுமையான எதிர்ப்பையும் மீறி பொதுக்குழுக் கூட்டம் நடத்தி பொதுச் செயலாளராக பதவியேற்றார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களையும், பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்யப்பட்டதையும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அதேநேரம், பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்வுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்நிலையில், தனது பலத்தை நிரூபிக்கும் வகையில், திருச்சியில் முப்பெரும் விழா மாநாட்டை ஓ.பன்னீர் செல்வம் இன்று நடத்துகிறார். திருச்சி டிவிஎஸ் சுங்கச்சாவடி அருகே உள்ள பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்த மாநாடு, எம்ஜிஆர் பிறந்த நாள், ஜெயலலிதா பிறந்த நாள், அதிமுகவின் பொன் விழா என முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதில், அதிமுக தலைமையக கட்டிடம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், பல ஆயிரக்கணக்கானோர் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாநாட்டுத் திடலை ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், இது வரலாறு படைக்கும் மாநாடாக இருக்கும் என்று தெரிவித்தார்.
முன்னதாக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோர் மாநாட்டில் பங்கேற்க அழைப்புவிடுக்கப்படும் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருந்தார். சசிகலா, டி.டி.வி.தினகரன் மட்டுமல்ல, இடைப்பட்ட காலத்தில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அனைவருக்கும் அழைப்புவிடுக்கப்படும் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருந்தார்.
அதேபோல, சசிகலா, டி.டி.வி.தினகரனை திருச்சி மாநாட்டில் பங்கேற்க ஓ.பன்னீர் செல்வம் அழைப்புவிடுத்தார். இருப்பினும், இருவருக்கும் நேரில் சென்று ஓ.பன்னீர் செல்வம் அழைக்கவில்லை. டி.டி.வி.தினகரனையும், சசிகலாவை அ.தி.மு.கவில் சேர்ப்பதற்கு எடப்பாடி பழனிசாமி மட்டுமே கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. சசிகலாவும், டி.டி.வியும் எடப்பாடி பழனிசாமியை மட்டுமே கடுமையாக விமர்சித்துவருகின்றனர்.
எனவே, எடப்பாடியை வீழ்த்துவதற்கு, ஓ.பன்னீர் செல்வத்துடன் கரம்கோர்க்க சசிகலாவும், டி.டி.வி.தினகரன் மாநாட்டில் பங்கேற்பார்களா என்று கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, ‘ஓ.பன்னீர் செல்வம் சந்திக்க விரும்பினால், நேரம் வழங்குவேன். மாநாட்டில் கலந்துகொள்வது பற்றி யோசித்து முடிவு செய்வேன்’ என்று தெரிவித்தார்.
ஜி ஸ்கொயர் விவகாரம்.. தி.மு.க எம்எல்ஏ வீட்டில் சோதனை... சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, O Panneerselvam