முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பிரதமர் என்னிடம் கேட்டுக்கொண்டது இதுதான்... மோடியுடன் செல்பி எடுத்த மாற்றுத் திறனாளி நெகிழ்ச்சி

பிரதமர் என்னிடம் கேட்டுக்கொண்டது இதுதான்... மோடியுடன் செல்பி எடுத்த மாற்றுத் திறனாளி நெகிழ்ச்சி

மாற்றுத்திறனாளி மணிகண்டன்

மாற்றுத்திறனாளி மணிகண்டன்

பிரதமர் மோடியைச் சந்தித்த அனுபவத்தை பா.ஜ.கவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி பகிர்ந்துகொண்டார்.

  • Last Updated :
  • Erode, India

ஈரோட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மணிகண்டன், கிருஷ்ணம்பாளையம் ஜீவா நகரைச் சேர்ந்தவர். பிறவியிலேயே மாற்றுதிறனாளியான இவர், சென்னை குருகுலத்தில் 7-ம் வகுப்பு வரை படித்துள்ளார். 11 ஆண்டுகளாக ஜீவா நகர் பகுதியில்  பெட்டிக்கடை நடத்தி வரும் மணிகண்டன், பா.ஜ.கவின் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் கடந்த 9 ஆண்டுகளாக கட்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்.

இந்த நிலையில் மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு அண்ணாமலை ஈரோட்டில் கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து கொண்ட மணிகண்டனை அண்ணாமலை கவனித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போதும் அதிமுகவிற்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் மணிகண்டன் ஈடுபட்டுள்ளார்.

மணிகண்டனுக்கு கட்சி மீது உள்ள ஆர்வத்தைப் பார்த்த  அண்ணாமலை, மணிகண்டன் குறித்து பா.ஜ.க தலைமையிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து மோடி சென்னை வந்த போது  மணிகண்டனை சந்தித்து செல்பி எடுத்துக் கொண்டார்.

இதுகுறித்து பேசிய மணிகண்டன், ‘கட்சியின் மீது கொண்ட ஆர்வத்தால் பல்வேறு பணிகளை கடந்த 9 ஆண்டுகளாக செய்து வரும் நிலையில் பிரதமரைப் பார்ப்பதற்கு தனக்கொரு அரிய வாய்ப்பு கிடைத்து என்றார். இதனால் நான் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளேன். மோடி என்னை சந்தித்து தங்களுடைய பணிகள் சிறப்பாக இருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மாற்றுத் திறனாளி பாஜக தொண்டருடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட பிரதமர் மோடி… கவனம் ஈர்க்கும் புகைப்படம்

மோடியிடம் ஒரு செல்பி எடுக்க வேண்டும் என கேட்டேன். பிரதமர் என்றும் பாராமல் என்னுடைய போனிலேயே செல்பி எடுத்துக் கொடுத்தார். கட்சியின் அடிமட்ட தொண்டன் கூட பிரதமரைச் சந்திக்கலாம் என்ற  நிலை உள்ளது. மாற்றுத்திறனாளி என்பது கட்சியில் பணியாற்ற  தடை கிடையாது. 2024-ல் மோடி மீண்டும் பிரதமராகவும் 2026-ல் அண்ணாமலை  முதல்வராகவும் பாடுபடபோவதாகவும் தெரிவித்தார்.

top videos

    செய்தியாளர்: பாபு.

    First published:

    Tags: Modi