முகப்பு /செய்தி /தமிழ்நாடு / முத்திரைத்தாள் கட்டண உயர்வு மசோதாவை அரசு திரும்பப் பெற வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்

முத்திரைத்தாள் கட்டண உயர்வு மசோதாவை அரசு திரும்பப் பெற வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்

அண்ணாமலை

அண்ணாமலை

முத்திரைத்தாள் கட்டணம் உயர்வு மசோதாவை அரசு திரும்பப் பெற வலியுறுத்தி அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

முத்திரைத்தாள் விலையை 10 மடங்கு உயர்த்தி உள்ள சட்ட மசோதாவை, தமிழ்நாடு அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சொத்துவரி, குடிநீர் வரி, பால் விலை, மின் கட்டணம் உள்ளிட்டவற்றின் உயர்வைத் தொடர்ந்து முத்திரைத்தாள் கட்டணமும் உயர்த்தப்படுவதாகக் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் அரசு நிர்ணயிக்கும் வழிகாட்டி மதிப்பை விட, சந்தை விலை 50 சதவீதம் வரை அதிகம் உள்ளதாகவும், வழிகாட்டி மதிப்பு 33 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது, சாமானியர்கள் நிலம் மற்றும் வீடு வாங்குவதை முடக்கிவிடும் எனக் கூறியுள்ளார்.

2022-23ஆம் நிதியாண்டில் பத்திர பதிவுத்துறை 24 சதவீதம் அளவுக்கு அதிக வருவாய் ஈட்டியுள்ள நிலையில், எதற்காக முத்திரைத்தாள் கட்டணமும், வழிகாட்டி மதிப்பும் உயர்த்த வேண்டும் எனக் கேள்வி எழுப்பி உள்ளார். எனவே, தமிழ்நாடு அரசு இந்த சட்டமசோதாவை உடனே திரும்பி பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Also Read : அரசு விரைவுப்பேருந்தில் சலுகை கட்டண முறை ரத்து..

சந்தை விலை உயரும் அபாயம் உள்ளதால், அரசால் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு இழப்பீடு வழங்க மட்டுமே புதிய வழிகாட்டி மதிப்பைப் பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

First published:

Tags: Annamalai, TN Assembly