முகப்பு /செய்தி /தமிழ்நாடு / "மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்.." - தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்!

"மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்.." - தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்!

தமிழ்நாடு மின்சாரத் துறை

தமிழ்நாடு மின்சாரத் துறை

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 18,000 மெகா வாட்டிற்கு மேல் மின் நுகர்வு செய்யப்பட்டு உள்ளதாக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் வியாழக்கிழமை ஒரே நாளில் 18 ,000 மெகா வாட்டிற்கு மேல் மின் நுகர்வு செய்யப்பட்ட நிலையில், கோடைக்காலம் துவங்க உள்ளதை அடுத்து, பொதுமக்கள் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

கோடைக் காலத்தில் தமிழ்நாட்டில் மின்சாரத்தின் தேவை அதிகரிக்கும் என்பதால் அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், மார்ச் மாதம் 16ம் தேதி ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 18,053 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு உள்ளதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்பு, அதிகபட்சமாகக் கடந்த 15-ம் தேதி 17 ஆயிரத்து 749 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். தேவை அதிகரித்த போதும் எந்தவித தடையும் இன்றி மின் சேவை வழங்கப்படுவதாகவும் கூறியுள்ளார். ஏசி, ஃபிரிட்ஜ், மின்விசிறி உள்ளிட்ட மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரிப்பால், மின் நுகர்வு அதிகரித்துள்ளது.

Also Read : அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தேதி அறிவிப்பு

வரும் காலத்தில் இன்னும் மின்சார தேவை அதிக ஏற்படக்கூடும் என்ற நிலையில் பொதுமக்கள் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

First published:

Tags: Electricity, Senthil Balaji