முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழ்நாட்டிற்கும் சவுராஷ்டிராவுக்கும் ஆயிரம் ஆண்டு பழமையான உறவு உள்ளது : ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ்நாட்டிற்கும் சவுராஷ்டிராவுக்கும் ஆயிரம் ஆண்டு பழமையான உறவு உள்ளது : ஆளுநர் ஆர்.என்.ரவி

சிறப்பு ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்த ஆளுநர்

சிறப்பு ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்த ஆளுநர்

Saurashtra Tamil Sangam | தமிழ்நாட்டில் உள்ள சவுராஷ்டிரா மக்கள் தங்களது வேர்களைத் தேடி செல்ல வேண்டும் என ஆளுநர் பேச்சு

  • Last Updated :
  • Tamil Nadu, India

சவுராஷ்டிராவுக்கும், தமிழ்நாட்டிற்கும் ஆயிரம் ஆண்டு பழமையான உறவு உள்ளதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் சவுராஷ்டிரா இடையேயான தொடர்பை மீட்டெடுக்கும் வகையில் குஜராத் மாநிலத்தில் நாளை மறுதினம் முதல் 26-ம் தேதி வரை சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதற்காக மதுரையில் இருந்து குஜராத் விராவல் நகர் வரை சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: அதிகார பசி கொண்டவர்களால் நாடு பெரும் இன்னல்களை சந்தித்தது: பிரதமர் மோடி

top videos

    இதன்படி, மதுரையிலிருந்து வந்த சிறப்பு ரயிலை சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ் இலக்கியம் மற்றும் கல்வெட்டுகளில் சவுராஷ்டிராவுக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள தொடர்புகள் குறித்து விளக்கங்கள் உள்ளதாகவும், தமிழ்நாட்டில் உள்ள சவுராஷ்டிரா மக்கள் தங்களது வேர்களைத் தேடி செல்ல வேண்டும் எனவும் கூறினார்.

    First published:

    Tags: RN Ravi, Tamil Nadu Governor