முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழ்நாட்டை உற்று நோக்கினால் வறுமை, பட்டினி, தீண்டாமை உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளது தெரியும் - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

தமிழ்நாட்டை உற்று நோக்கினால் வறுமை, பட்டினி, தீண்டாமை உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளது தெரியும் - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், கல்வித்துறையில் ஆங்கில வழியை கட்டாயமாக்கியப்போது, அதை பாரதியார் எதிர்த்தார் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

  • Last Updated :
  • Chennai [Madras], India

தமிழ்நாட்டை உற்று நோக்கினால் வறுமை, பட்டினி, தீண்டாமை உள்ளிட்ட பிரச்னைகள் இருப்பது தெரியும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சாணக்யா யூடியூப் சேனலின் நான்காம் ஆண்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, நாட்டின் முன்னேற்றத்தில் ஊடகங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன என்றார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், கல்வித்துறையில் ஆங்கில வழியை கட்டாயமாக்கியப்போது, அதை பாரதியார் எதிர்த்தார் என தெரிவித்தார்.

நமது நாட்டை ஒரு குடும்பமாக பார்க்க வேண்டும் என்ற ஆளுநர், குடும்பத்தில் ஒருவருக்கு பிரச்னை என்றால் அது ஒருவருக்கு மட்டுமானது இல்லை, அனைவருக்குமானது என்றார். மேலும் ஆங்கிலம் மக்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான வழி என்றும் தமிழ்நாட்டில் தற்போது பல்வேறு சமூக பிரச்னைகள் நிலவிவிருவதாக தெரிவித்தார்.

top videos

    தொடர்ந்து பேசிய அவர், பெரிய அளவில் அனைத்து விதத்திலும் சிறப்பாக இருந்தும் இன்னும் சில இடங்களில், இந்த சமகாலத்தில் கூட பசி , தீண்டாமை கொடுமை உள்ளது. சிலருக்கு கோவில் செல்வது கூட மறுக்கப்படுகிறது. 27% மாணவர்கள் தான் அரசு பள்ளிகளுக்கு செல்கிறார்கள், ஆனால் அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிக சம்பளம் பெறுகிறார்கள். கல்வி, மருத்துவம், மின்சாரம் என அனைத்திலும் எந்த ஏற்றத்தாழ்வும் இல்லாமல் இருக்க வேண்டும் என கூறினார். இந்த நிகழ்ச்சியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    First published:

    Tags: RN Ravi, Tamil Nadu, TN Assembly, TN Govt