தானும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் சந்திப்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்குச் சென்றுள்ளார். நேற்று பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற ஆளுநர், இரண்டாம் நாளான இன்று காலை எட்டிவயல் பகுதியில் விவசாயிகளைச் சந்தித்தார். பசுமை தோட்டத்தைப் பார்வையிட்ட ஆளுநர் அங்கு நுங்கு, பதநீர் ஆகியவற்றை சாப்பிட்டார். அதனைத்தொடர்ந்து, பசுமை தோட்டத்தில் மரக்கன்று நட்டுவைத்து, அரிய வகை மாட்டினங்கள் மற்றும் கோழி பண்ணையைப் பார்வையிட்டார்.
Also Read : தமிழகம் முழுவதும் புதிதாக 500 அங்கன்வாடி கட்டிடங்கள்.. அமைச்சர் கீதாஜீவன் அறிவிப்பு...
பின்னர் விவசாயிகளுடன் ஆளுநர் கலந்துரையாடினார். தானும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவி, உலகத்திற்கே உணவு வழங்கும் அளவிற்கு இந்தியா உயர்ந்துள்ளது என்றார். மேலும் உணவு உற்பத்தியில் இந்தியா சிறந்து விளங்கிய நிலையில், ஆங்கிலேயர் வருகையால் பணப் பயிர்கள் அதிகம் பயிரிட வைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ramanathapuram, RN Ravi