முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அம்மா என்றழைக்காத உயிரில்லையே பாடலில் உள்ள அர்த்தம் அனைத்தும் உண்மை - ஆளுநர் ஆர்.என் ரவி

அம்மா என்றழைக்காத உயிரில்லையே பாடலில் உள்ள அர்த்தம் அனைத்தும் உண்மை - ஆளுநர் ஆர்.என் ரவி

ஆர்.என்.ரவி

ஆர்.என்.ரவி

மன்னன் படத்தில் இடம்பெற்ற அம்மா என்றழைக்காத உயிரில்லையே பாடலில் உள்ள அர்த்தம் அனைத்தும் உண்மை என்று நெகிழ்ச்சியோடு ஆளுநர் ரவி குறிப்பிட்டார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இளைஞர்கள் எந்த சூழ்நிலையிலும் தங்களது தாயை கைவிடக் கூடாது என ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தி உள்ளார். அன்னையர் தினத்தை ஒட்டி ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா, பாரா கிரிக்கெட் வீரர் பொன்ராஜ், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், பேச்சாளர் ஈரோடு மகேஷ் உள்ளிட்டோரின் அம்மாக்களுக்கு விருதுகளை வழங்கி ஆளுநர் கவுரவித்தார். அப்போது பாரா கிரிக்கெட் வீரர் பொன்ராஜின் தாயார் காலில் விழுந்து, ஆளுநர் ரவி ஆசீர்வாதம் பெற்றார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, மனிதனிடம் உள்ள அன்பு குணம் தாய் மூலம் மட்டுமே வருவதாகவும், குழந்தைகள், குடும்பத்தினர் வளர்ச்சிக்காக உழைப்பதை அன்னையர்கள் மகிழ்ச்சியாகவே கருதுவதாகவும் கூறினார். இன்றைய கால கட்டத்தில் இளைஞர்கள் பெற்றோரை விட்டு விட்டு வேறு பகுதிகளுக்கு செல்வது வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.

மன்னன் படத்தில் இடம்பெற்ற அம்மா என்றழைக்காத உயிரில்லையே பாடலில் உள்ள அர்த்தம் அனைத்தும் உண்மை என்று நெகிழ்ச்சியோடு ஆளுநர் ரவி குறிப்பிட்டார்.

First published:

Tags: Governor, RN Ravi