முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்

ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்

ஆன்லைன் ரம்மி, கவர்னர் ரவி

ஆன்லைன் ரம்மி, கவர்னர் ரவி

ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களால் தமிழ்நாட்டில் தொடர்ந்து தற்கொலை சம்பவங்கள் அதிகரித்ததால் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 2020-ம் ஆண்டு நவம்பரில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. 2021-ம் ஆண்டு பிப்ரவரியில் சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது.

அந்தச் சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அச்சட்டம் செல்லாது என்று கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி தீர்ப்பளித்தது. அதனையடுத்து, மீண்டும் ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்வதற்காக கடந்த ஆண்டு செப்டம்பரில் அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

அதைத் தொடர்ந்து அக்டோபர் 19-ம் தேதி சட்டசபை கூட்டப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்த நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் டிசம்பர் மாதம் காலாவதியானது. இதற்கிடையில் ஆன்லைன் ரம்மியால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்ந்தன.

இதற்கிடையில் கடந்த மார்ச் மாதம் ஆன்லைன் ரம்மி மசோதாவை ஆளுநர் திரும்பி அனுப்பினார். அதனைத் தொடர்ந்து, இரண்டாவது ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்ட்டது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் காலதாமதம் செய்தநிலையில் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.

First published:

Tags: Online rummy