முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கூட்டுறவு வங்கியில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு குட்நியூஸ்.. ஆன்லைன் பரிவர்த்தனை வசதி அறிமுகம்!

கூட்டுறவு வங்கியில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு குட்நியூஸ்.. ஆன்லைன் பரிவர்த்தனை வசதி அறிமுகம்!

ஆன்லைன் பரிவர்த்தனை

ஆன்லைன் பரிவர்த்தனை

Online transaction | கடந்த ஓராண்டாக எடுத்த தொடர் முயற்சிகளின் விளைவாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் விரைவில் யுபிஐ சேவை அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த  “ஓராண்டாக எடுத்த தொடர் முயற்சிகளின் விளைவாக, தமிழ்நாட்டில் உள்ள தலைமை கூட்டுறவு வங்கி, அதன் 54 கிளைகள் மற்றும் அனைத்து 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், அதன் 922 கிளைகள்  என அனைத்திலும் IMPS (Instant Money Payment System) கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அனைத்து தலைமை மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

top videos

    மேலும், இன்னும் இரண்டு வாரங்களில் இவை அனைத்திலும் UPI (Unified Payment Interface) வசதியும் கொண்டுவரப்படும். இதன்மூலம் Google Pay, PayTM, BHIM உள்ளிட்ட அனைத்து பணமற்ற பரிவர்த்தனை வசதிகளும் அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Bank, Online Transaction, UPI