முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி... கொலிஜியம் பரிந்துரை..!

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி... கொலிஜியம் பரிந்துரை..!

நீதிபதி கங்கா பூர்வாலா

நீதிபதி கங்கா பூர்வாலா

ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றிய முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள ராஜாவை ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொலிஜியம் பரிந்துரை செய்தது. ஆனால் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நீதிபதி ராஜா சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில், அவருடைய கோரிக்கை மீண்டும் கொலீஜியத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. நீதிபதி டி ராஜாவை ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் செய்த பரிந்துரையில் எந்த மாற்றமும் இல்லை என திட்டவட்டமாக கொலிஜியம் கூறியுள்ளது.

top videos

    எனவே மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.பி. கங்கா பூர்வாலாவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

    First published:

    Tags: Judge, Madras High court