முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பயப்படுவதற்கு எதுவும் இல்லை... சோதனை நடத்தியதற்கு நன்றி- ஜி ஸ்கொயர் நிறுவனம்

பயப்படுவதற்கு எதுவும் இல்லை... சோதனை நடத்தியதற்கு நன்றி- ஜி ஸ்கொயர் நிறுவனம்

ஜி ஸ்கொயர்

ஜி ஸ்கொயர்

எங்களிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை. பயப்படுவதற்கும் எதுவும் இல்லை என்று ஜி ஸ்கொயர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜி ஸ்கொயர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘எங்களிடம் மறைப்பதற்கும் எதுவும் இல்லை, பயப்படுவதற்கும் எதுவும் இல்லை என்று உங்கள் அனைவருக்கும் உறுதியளிக்கிறோம். இன்று நடைபெற்ற சோதனை முழுவதும் நாங்கள் அவர்களுக்கு ஒத்துழைத்தோம். எங்களுக்கு எதிராக கெட்ட எண்ணத்தில் மேற்கொள்ளப்படும் அவதூறுகளை இந்தச் சோதனை முடிவுக்கு கொண்டுவரும் என்று நம்புகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே பலதரப்பட்டவர்களின் ஆதாரமில்லாத பொய்யான குற்றச்சாட்டுகள் மூலம் உத்தரவில்லாத துன்புறுத்தல்கள் எங்கள் நிறுவனத்தின் மீது நடத்தப்பட்டுவருகிறது. நம்பமுடியாத அளவுக்கு சவாலான காலமாக இருந்தாலும், இப்போது இந்தக் குற்றச்சாட்டுகளின் அதிகாரப்பூர்வத் தன்மையை மதிப்பீடு செய்யும் வகையிலான நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு நாங்கள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். இந்தக் குற்றச்சாட்டுகளின் மீது எந்த உண்மையும் இல்லை என்பதை இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அழுத்தமாக தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.

ஒரு நிறுவனமாக நாங்கள் வெளிப்படைத் தன்மையுடன் இருப்பதையும், எங்கள் பங்குதாரர்களுக்கு நேர்மையுடன் இருக்கவேண்டும் என்பதையும் நம்புகிறோம். எங்களிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை மற்றும் பயப்படுவதற்கு எதுவும் இல்லை என்று உங்களிடம் உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஜி ஸ்கொயர் விவகாரம்.. தி.மு.க எம்எல்ஏ வீட்டில் சோதனை... சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர்

இந்த முழு சோதனை முழுவதும் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினோம். மேலும், இந்த மதிப்பீடு எங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் கெட்ட எண்ணம்கொண்ட பிரச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவரும் என்று நம்புகிறோம். இந்த துயரமான நேரத்தில் எங்களுக்கு உறுதுணையாக நின்ற பொதுமக்களுக்கும் ஊடகங்களுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்’ என்று தெரிவித்துள்ளனர்.

First published: