ஜி ஸ்கொயர் நிறுவனம் திமுக குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானதோ அல்லது அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனமோ அல்ல என்று அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
கடந்த 14-ஆம் தேதி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுகவினரின் சொத்து பட்டியல் ஒன்றை வெளியிட்டார்.
அதில் திமுகவினரின் குடும்பத்தினருக்கு சொந்தமான ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்திற்கு 38 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் அண்ணாமலையின் குற்றச்சட்டுகள் ஆதாரமற்றது என்று ஜி ஸ்கொயர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் நிறுவனத்தின் நற்பெயர்க்கு களங்கம் விளைவிக்கும் நோக்கோடு சில தனிநபர்கள் வெறுப்பு பிரசாரத்தில் இறங்கியிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகே தங்களது நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு லாபமீட்டுவதாகவும், ஊழல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் பல கட்டுக்கதைகளும், எந்த தரவுகளும் இல்லாத வதந்திகளும் பரப்பப்பட்டு வருவதாக சாடியுள்ளது.
திமுக ஆட்சியமைப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தங்களது நிறுவனம் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாகவும்,
தங்களது நிறுவனம் திமுகவின் முதல் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானதோ அல்லது அவர்களின் கட்டுப்பாட்டிலோ இல்லை என்றும் ஜி ஸ்கொயர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஜி ஸ்கொயர் நிறுவனங்களில் ஐடி ரெய்டு... 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை..!
தங்களது சொத்து மதிப்பு 38 ஆயிரத்து 827 கோடி ரூபாய் என அண்ணாமலை குறிப்பிட்டிருப்பதை மறுப்பதாகவும், ஜி ஸ்கொயர் மற்றும் தங்களது பங்குதாரர்களின் கட்டுமான திட்டங்களை தவறான மதிப்புகளோடு அண்ணாமலை சித்தரித்துள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.மேலும், அண்ணாமலையின் செயலால் பல ஆண்டு உழைப்பில் பெறப்பட்ட வாடிக்கையாளர்களின் நம்பிக்கை சிதைந்துள்ளதாகவும் ஜி ஸ்கொயர் நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.