முகப்பு /செய்தி /தமிழ்நாடு / முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா காலமானார்... ஆளுநர் இரங்கல்! 

முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா காலமானார்... ஆளுநர் இரங்கல்! 

நரேஷ் குப்தா காலமானார்

நரேஷ் குப்தா காலமானார்

தமிழக மக்களுக்கு மிகுந்த சிரத்தையுடனும், நேர்மையுடனும் சேவையாற்றிய அவர், சிறந்த நிர்வாகியாக என்றும் நினைவுகூரப்படுவார்

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா காலமானார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் பதிவில்,

மூத்த ஐஏஎஸ் அதிகாரி நரேஷ் குப்தாவின் மறைவு வருத்தம் அளிக்கிறது. தமிழக மக்களுக்கு மிகுந்த சிரத்தையுடனும், நேர்மையுடனும் சேவையாற்றிய அவர், சிறந்த நிர்வாகியாக என்றும் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுதாபங்கள். ஓம் சாந்தி என்று பதிவிட்டுள்ளார்.

2005- 2010 வரையிலான 5 ஆண்டுகளில் தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக நரேஷ் குப்தா பணியாற்றினார். காந்தியவாதியாக அறியப்படும் இவர், நியாயமான தேர்தலை நடத்துவதற்கு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டவர். 2009 திருமங்கலம்  இடைத்தேர்தலின் போது பணப்பட்டுவாடா சம்பவத்திற்குப் பிறகு, கடுமையான முடிவுகளை தமிழ்நாட்டில்  நடைமுறைப்படுத்தினார்.

First published:

Tags: Tamil Nadu