முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மேற்கு தொடர்ச்சி மலையில் கொளுந்து விட்டு எரிந்த காட்டுத்தீ - விலங்குகள் தப்பியோட்டம்

மேற்கு தொடர்ச்சி மலையில் கொளுந்து விட்டு எரிந்த காட்டுத்தீ - விலங்குகள் தப்பியோட்டம்

தீ விபத்து

தீ விபத்து

கடல் மட்டத்திலிருந்து சுமார் 1500 மீட்டர் உயரத்தில் உள்ள பேய்மலை மொட்டை என்ற இடத்தில் இரவில் மின்னல் தாக்கியதன் காரணமாக திடீரென வனப்பகுதியில் காட்டுத்தீ மள மள வென கொழுந்து விட்டு எறிந்தது.

  • Last Updated :
  • Srivilliputhur, India

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மேற்கு தொடர்ச்சி மலை உள்ளது. இந்த மேற்கு தொடர்ச்சி மலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு யானை, புலிகள், சிறுத்தைகள், காட்டு எருமைகள், சருகு மான்கள், புள்ளிமான்கள், மிளா மான்கள் என ஏராளமான வன விலங்குகள் அதிக அளவில் உள்ளன.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை கடல் மட்டத்திலிருந்து சுமார் 1500 மீட்டர் உயரத்தில் உள்ள பேய்மலை மொட்டை என்ற இடத்தில் இரவில் மின்னல் தாக்கியதன் காரணமாக திடீரென வனப்பகுதியில் காட்டுத்தீ மள மள வென கொழுந்து விட்டு எறிந்தது. இதனால் வனவிலங்குகள் தப்பி ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகிறது. தீயை அணைக்க அப்பகுதிக்குள் வனத்துறையினர் மற்றும் மலைவாழ் மக்களும் சேர்ந்து சென்றுள்ளனர்.

மின்னல் தாக்கி தீ பற்றி எரியும் பேய்மலை மொட்டை பகுதியில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வனத்துறையினர்கள் பயன்படுத்தும் வாக்கிடாக்கி செயல்படுவதற்கான வயர்லெஸ் கருவி அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் தீப்பிடித்து எறிவதால் வயர்லெஸ் கருவிக்கு ஏதும் பாதிப்பு ஏற்படுத்தி விடுமோ என வனத்துறையினர் அச்சமடைந்துள்ளனர்.

ஒருவேளை பாதிப்பு ஏற்பட்டால் வனத்துறையினரின் வாக்கிடாக்கியில் அனைத்தும் செயலிழக்கும் அபாயமும் ஏற்படும் சூழலும் உள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் மலைப்பகுதிகளில் நீர்வரத்து இல்லாததாலும் தீயை அணைக்கும் நவீன கருவிகள் வனத்துறையினரிடம் இல்லாததாலும் விரைவில் தீயை அணைக்க சிரமம் ஏற்படுவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

top videos

    செய்தியாளர் : செந்தில் குமார் (சிவகாசி)

    First published:

    Tags: Fire accident, Tamil News, Wildfires